கஞ்சா மாடல் அரசு என திமுக அரசை அதிமுக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது-
தலைநகர் சென்னை புளியந்தோப்பு பகுதியில் போதை ஊசி செலுத்திய இளைஞர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது இது மரணமல்ல, விடியா திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் அரங்கேறிய படுகொலை!
தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் இன்று மிட்டாய் போல போதைப் பொருட்கள் கிடைப்பது தான் இந்த ‘கஞ்சா மாடல்’ அரசின் சாதனையா? இளைஞர்களின் எதிர்காலத்தை போதைக்கு காவு கொடுத்துவிட்டு, கைகட்டி வேடிக்கை பார்க்கும் இந்த பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதே தமிழகத்திற்கு உண்மையான விடியல்!!
இவ்வாறு அந்தப் பதிவில் அதிமுக குறிப்பிட்டுள்ளது.

