ஆணழகனாக தனது பயணத்தை தொடங்கி, விஜய் டிவியில் கலக்க போவது யாரு போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் மிமிக்ரி கலைஞராக பிரபலமானவர் ரோபோ சங்கர்.
தனது அபாரமான திறமையால், குறுகிய காலத்திலேயே சினிமாவில் நுழைந்து, மாரி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், விஸ்வாசம், புலி என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து, தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக்கொண்டார்.
குறிப்பாக மாரி படத்தில் அவரது காமெடி பலருக்கும் பிடித்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்து மீண்டும் படங்களில் நடித்து வந்தார்.
சில நாட்களுக்கு முன்பு ஒரு படப்பிடிப்பில் இருந்த போது ரோபோ சங்கர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக படக்குழுவினர் அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
பின்பு மருத்துவமனையில் ஓய்வில் இருந்த ரோபோ ஷங்கருக்கு புதன்கிழமை மாலை திடீரென உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும், கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.
ஏற்கனவே மஞ்சள்காமாலை நோய்யினால் பாதிப்பட்டு இருந்தார் ரோபோ ஷங்கர்.

