தோனி ஒன்று விளையாடினால் பிளேயிங் லெவனில் இருந்து ஆட வேண்டும், இல்லையெனில் முழு சீசனிலும் அவர் ஆடக்கூடாது என்கிறார் ஏ.பி.டிவில்லியர்ஸ், சஞ்சு வந்த பிறகே தோனிக்கு வேலையில்லை என்றார் ஆகாஷ் சோப்ரா. இம்பாக்ட் வீரராக தோனி இறங்கி ஆடுவதில் யாதொரு பயனுமில்லை என்று விவாதங்கள் பல விதமாகச் சென்று கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் அஸ்வின் இந்த விவாதங்களை முடித்து வைத்து தன் யூடியூப் சேனலில் தன் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.
2020-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, அதன்பிறகு முழுவதும் ஐபிஎல்-இல் மட்டும் விளையாடி வருகிறார். 44 வயதான அவர், இன்னும் கடுமையாக பயிற்சி செய்து வருவது, தொடர்ந்து அணிக்காக விளையாட வேண்டும் என்ற எண்ணத்தை காட்டுகிறது.
முன்னாள் தென்னாப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ், தோனி இனி டாப்-6 பேட்ஸ்மேனாக இல்லை எனவே ஒன்று அவர் டாப் சிக்ஸில் ஆட வேண்டும், இல்லையேல் முழு சீசனையும் தவிர்க்க வேண்டும் என்று கூறியிருந்தாலும், அஸ்வின் பார்வையில் தோனியின் மதிப்பு வெறும் பேட்டிங்கில் மட்டும் இல்லை. தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாடுக்கு வழிகாட்டியாக இருப்பது தான் அவரது மிகப்பெரிய பங்களிப்பு என்பதாக உள்ளது.
“சிஎஸ்கே லெவன் அறிவிக்கப்படுகிறது என்றால் அதில் தோனி இடம்பெற வேண்டும். விவாதம் இதோடு முடிந்து விடுகிறது. அவர் லெவனில் தான் ஆட வேண்டும், அப்படி ஆட விரும்பவில்லை எனில் அவர் ரிட்டையர் ஆகிவிடுவார். அவர் தன்னால் லெவனில் ஆட முடியும் என்று வலுவக நம்புகிறார். கடந்த 3 மாதங்களாக இதற்காகவே கடும் பயிற்சியில் ஈடுபட்டார்.

