புதுச்சேரி சட்டப்பேரவைக்கு ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன.
இந்நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் பேட்டியளிக்கையில், தேர்தல் தேதியை அறிவித்தார்.
அதன்படி, புதுச்சேரி சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 9-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே மாதம் 4-ஆம் தேதி எண்ணப்படுகிறது.
தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டதையடுத்து,புதுச்சேரி முழுவதும் இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

