ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான கல்பாத்தி சுரேஷ் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய்யும், த்ரிஷாவும் ஒரே காரில் வந்து பங்கேற்றனர்.
தமிழ் சினிமாவில் உட்ச நட்சத்திரமாக இன்றளவும் இருக்கக்கூடியவர் விஜய். சினிமாவை விட்டுவிட்டு முழு நேர அரசியலுக்கு வந்த பிறகும் கூட, அவரது இடத்தில் வேறெந்த நடிகரையும் வைத்து பார்க்க முடியவில்லை என்பதே எதார்த்தம். இந்நிலையில், நடிப்பதை விடுத்து, இப்போது முழு நேர அரசியலில் இயங்கி வரும் தவெக தலைவர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையில் புகைச்சல் கிளம்பியுள்ளது.
அதாவது, விஜய் த்ரிஷாவுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில், கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி, லியோ ஆகிய படங்கள் அனைத்துமே வெற்றி படங்களாக அமைந்தன.
இந்நிலையில், விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சர்ச்சைகள் வெளியாகின. இந்த விவகாரம் பெரும் விவாதங்களுக்கும், விமர்சனங்களுக்கும் வித்திட்டது.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய்யும், த்ரிஷாவும் சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒரே காரில் வந்து பங்கேற்றுள்ளனர். ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் கல்பாத்தி சுரேஷ் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இருவரும் ஒரே நிற உடையில் வருகை தந்தனர். அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

