அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுப் படைகள் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் ஆறாவது நாளாக இன்று தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக சரிந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 3 நாட்களில் தங்கத்தின் விலை கடுமையாக சரிந்துள்ளது. இது தங்கம் வாங்குபவர்களுக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.
2/6
கடந்த 3 நாட்களாக தங்கம் விலை குறைந்து வருவதால், நகைக் கடைகளில் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, திருமண சீசனும் நடைபெற்று வருவதால் இந்த விலை மாற்றங்கள் தங்கம் வாங்குபவர்களுக்கு சற்று ஆறுதலை வழங்கியுள்ளது என்றே சொல்லலாம்.
தங்கம் விலை குறைய காரணம்? சர்வதேச அளவில் டாலர் வலுவடைவது உள்ளிட்ட காரணிகள் தங்கத்தின் விலையைப் பாதிக்கின்றன. உலக சந்தையில் அழுத்தம் குறைந்தால், உள்நாட்டு சந்தையிலும் விலைகள் சற்று குறைய வாய்ப்புள்ளது. அதன்படி, சர்வதேச விலைகளில் ஏற்பட்ட சமீபத்திய ஏற்ற இறக்கங்கள் காரணமாக உள்நாட்டு சந்தையிலும் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், தங்கம் விலை கடந்த 3 நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு ரூ.5,600 வரை சரிந்துள்ளது.

நேற்று (மார்ச் 4) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.265 குறைந்து ஒரு கிராம் ரூ.15,200க்கும் சவரனுக்கு ரூ.2,120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,21,600க்கும் விற்பனையானது. அதேபோல், 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் ரூ.13,100க்கும் சவரனுக்கு ரூ.1200 குறைந்து ஒரு சவரன் ரூ.1,04,800க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மேலும், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.295க்கும் கிலோவுக்கு ரூ. 20,000 குறைந்து ஒரு கிலோ ரூ. 2,95,000க்கும் விற்பனையானது. தொழில்துறை தேவை, சூரிய சக்தி துறையில் அதிகரித்து வரும் தேவை மற்றும் சர்வதேச சந்தை மாற்றங்கள் ஆகியவை வெள்ளி விலையை பாதிக்கும் முக்கிய காரணிகளாகும்.

advertisement
6/6
தங்கத்தின் விலை தற்போது சிறிது சரிவை சந்தித்தாலும், நீண்ட கால முதலீடாகக் கருதினால் விலைகள் மீண்டும் உயர வாய்ப்புள்ளது. வாங்குவதற்கு முன் தரம், ஹால்மார்க் அடையாளம் மற்றும் உற்பத்தி கட்டணங்கள் போன்ற காரணிகளைச் சரிபார்ப்பது அவசியம்.