Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»“கிரிக்கெட்டில் சிறிய பங்களிப்பையும் பாராட்ட வேண்டும்” – இந்திய அணி​யின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர்

“கிரிக்கெட்டில் சிறிய பங்களிப்பையும் பாராட்ட வேண்டும்” – இந்திய அணி​யின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர்

March 3, 20263 Mins Read15 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யில் நேற்று முன்​தினம் கொல்​கத்​தா​வில் நடைபெற்ற முக்​கிய​மான ஆட்​டத்​தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 5 விக்​கெட்​கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறு​திக்கு முன்னேறியது.

இந்த ஆட்​டத்​தில் சஞ்சு சாம்​சன் விளாசிய 97 ரன்​கள் உதவி​யுடன் இந்​திய அணி 196 ரன்​கள் இலக்கை 4 பந்​துகள் மீதம் வைத்து வெற்றி கண்​டது. சூர்​யகு​மார் யாதவ் (18), திலக் வர்மா (27), ஷிவம் துபே (8) ஆகியோ​ரும் வெற்​றிக்கு தங்​களது பங்​களிப்பை வழங்​கினர்.

இந்​நிலை​யில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​துக்கு பின்​னர் நடை​பெற்ற பத்​திரி​கை​யாளர்​கள் சந்​திப்​பின் போது இந்​திய அணி​யின் தலைமை பயிற்​சி​யாள​ரான கவுதம் கம்​பீர் கூறிய​தாவது: ஒவ்​வொரு பங்​களிப்​பைப் பற்​றி​யும் நீங்​கள் பேசுவது மகிழ்ச்​சி​யளிக்​கிறது, ஏனென்​றால் பல ஆண்​டு​களாக, நாம் ஒரு சில பங்​களிப்​பு​களைப் பற்றி மட்​டுமே பேசி வரு​கிறோம். கிரிக்​கெட் ஒரு குழு விளை​யாட்​டு, இது எப்​போதும் குழு விளை​யாட்​டாகவே இருக்​கும்.

என்னை பொறுத்​தவரை​யில் ஷிவம் துபே அடித்த 2 பவுண்​டரி​களும் சஞ்சு சாம்​சன் குவித்த 97 ரன்​களைப் போலவே முக்​கி​யம். ஏனென்​றால் ஷிவம் துபே அந்த இரண்டு பவுண்​டரி​களை​யும் அடிக்​க​வில்லை என்​றால், சஞ்சு சாம்​சன் 97 ரன்​கள் குவித்​தது குறித்து பேசவே மாட்​டீர்​கள்.

பெரிய பங்​களிப்பு தலைப்​புச் செய்​தி​களில் இடம்​பிடிக்​கிறது. சிறிய பங்​களிப்​பு, அணி வெற்றி பெற உதவும். வெற்றி கோட்​டைக் கடக்க உதவும் அந்தபங்​களிப்பும் மிக​வும் முக்​கிய​மானது. நான் இருக்​கும் வரை இது​தான் தத்​து​வ​மாக இருக்கும்.

இதையும் படிக்க :  ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறாரா தோனி? சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் பதில்

டி20 கிரிக்​கெட் பயிற்சி முறை​களில் தரவு​களை நான் நம்​புவ​தில்​லை. அதை நான் பார்த்​த​தில்​லை. தரவு எதைப் பற்​றியது என்று கூட எனக்​குத் தெரி​யாது. ஏனென்​றால் பயிற்சி முறை​கள் என்​பது உள்​ளுணர்​வைப் பற்​றியது என்று நான் உணர்​கிறேன்.

டி20 கிரிக்​கெட் என்​பது உள்​ளுணர்​வைப் பற்​றியது. விளை​யாட்டு மற்​றும் டி 20 வடிவம் பற்றி எனக்கு என்ன அறிவு இருந்​தா​லும், அதை நான் கேப்​ட​னுக்​குக் கொடுக்க முயற்​சிக்​கிறேன், என்​னால் முடிந்​தவரை அவருக்கு உதவ முயற்​சிக்​கிறேன். ஆனால், இறுதி முடிவை எடுப்​பது கேப்​டன் தான்.

நேர்​மை​யாக கூறு​வதென்​றால் தரவு​களை நான் நம்​ப​வில்​லை, ஏனென்​றால் அது மிக​வும் மிகைப்​படுத்​தப்​பட்​ட​தாகும். என்​னைப் பொறுத்​தவரை, உலகத்​தரம் வாய்ந்த வீரர்​கள் எங்​களிடம் இருப்​பது எங்​களுக்கு மிக​வும் அதிர்​ஷ்டம் என்று நான் நினைக்​கிறேன்.

எங்​களிடம் வித்​தி​யாச​மாகப் பயன்​படுத்​தக்​கூடிய வீரர்​கள் உள்​ளனர், பல அணி​களுக்கு இந்த வசதி இல்​லை. ஜஸ்பி​ரீத் பும்ரா அல்​லது அர்​ஷ்தீப் சிங் அல்​லது வருண் சக்​ர​வர்த்தி போன்ற ஒரு​வரை ஆட்டத்தின் எந்த கட்​டத்​தி​லும் பயன்​படுத்​தலாம். பேட்​டிங் பார்​வை​யில், எங்​களிடம் வலிமை இருக்​கிறது. அது மிக​வும் முக்​கிய​மான ஒன்​று.

வலு இருக்​கும்​போது, ஒரு​போதும் இலக்கை துரத்​தும் போது விலகி இருக்க மாட்​டீர்​கள். ஒரு​போதும் விளை​யாட்​டிலிருந்து வெளி​யேற மாட்​டீர்​கள். அரை இறு​தி​யில் இங்​கிலாந்து அணியை எதிர்​கொள்​கிறோம். அவர்​கள் உலகத்​தரம் வாய்ந்த தரமான அணி. அவர்​களிடம் நிறைய தரமான வீரர்​கள் உள்​ளனர்.

இதையும் படிக்க :  டூ பிளெசியின் அதிரடியான ஆட்டத்தால் சாய்ந்த லக்னோ அணி!

மேலும் வான்​கடே மைதானம் கடின​மானது என்​பதை அனை​வருமே அறி​வார்​கள். நாங்​கள் அணிக்​காக​வும், நாட்​டுக்​காக​வும் ஏதாவது சிறப்​பாகச் செய்ய மற்​றொரு வாய்ப்பு கிடைக்​கும் என்று நம்​பு​கிறோம். சிறந்த ஆட்​டத்தை வெளிப்​படுத்​து​வோம் என்ற நம்​பிக்கை உள்ளது. இவ்​வாறு கவுதம் கம்​பீர் கூறி​னார்.

‘சஞ்சு உலகத் தரம் மிக்க வீரர்’

சஞ்சு சாம்​சன் குறித்து கவுதம் கம்​பீர் கூறும்​போது, “நியூஸிலாந்​துக்கு எதி​ரான டி 20 தொடர் சஞ்சு சாம்​சனுக்கு மிக​வும் கடின​மான​தாக அமைந்​தது. அதனால், சில நேரங்​களில் அவருக்கு ஓய்​வளிப்​பது மிக​வும் முக்​கிய​மாகத் தோன்​றியது. சஞ்சு சாம்​சனின் திறமையை நாங்​கள் அறிவோம்.

அவர், சர்​வ​தேச டி20 போட்​டிகளில் 3 சதங்​கள் விளாசி​யுள்​ளார். சர்​வ​தேச டி 20 போட்​டிகளில் நிறைய வீரர்​கள் 3 சதங்​கள் விளாசி​ய​தில்​லை. உலகக் கோப்​பைத் தொடரில் எங்​களுக்கு எப்​போது அவருடைய உதவி தேவைப்​படு​கிறதோ அப்​போது அவர் சிறப்​பாக செயல்​பட்டு அணிக்கு வெற்றி பெற்​றுத் தரு​வார் என்​பது எங்​களுக்​குத் தெரி​யும். சூப்​பர் 8 சுற்​றில் ஜிம்​பாப்​வேவுக்கு எதி​ரான போட்​டி​யில் அவர் சிறப்​பாக விளை​யாடி​னார்.

அந்த ஆட்​டத்​தில் இந்​திய அணிக்கு அதிரடி​யான தொடக்​கம் கிடைத்​தது.தற்​போது மீண்​டும் சிறப்​பாக செயல்​பட்டு ரன்​கள் குவித்​துள்​ளார். சஞ்சு சாம்​சன் தொடர்ச்​சி​யாக சிறப்​பாக விளை​யாட வேண்​டும் என்​ப​தையே நாங்​கள் எதிர்​பார்க்​கிறோம். அவர், ஆட்​டத்தை அதிரடி​யாக எடுத்​துச் செல்​ல​வில்​லை. மிக​வும் அமை​தி​யாக நேர்த்​தி​யான கிரிக்​கெட் ஷாட்​டு​களை மட்​டுமே விளை​யாடி​னார்​. சஞ்​சு சாம்​சன்​ உலகத்​ தரத்​திலான வீரர்​. அவரிடம்​ நிறைய திறமைகள்​ உள்​ளன” என்றார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவிவசாய கிணற்றில் கார் விழுந்து விபத்து – 4 பேர் உயிரிழப்பு
Next Article போர் பதற்றத்தால் முடங்கிய விமான சேவை: இந்தியாவில் சிக்கிய ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள்

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.