Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, July 4
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»‘திக் திக்’ பணிகளில் 8 ஆண்டுகள் சேவை… சென்னை ஏர்போர்ட் பாதுகாப்பு பிரிவில் இருந்து 3 மோப்ப நாய்கள் ஓய்வு!

‘திக் திக்’ பணிகளில் 8 ஆண்டுகள் சேவை… சென்னை ஏர்போர்ட் பாதுகாப்பு பிரிவில் இருந்து 3 மோப்ப நாய்கள் ஓய்வு!

March 3, 20262 Mins Read18 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

சென்னை விமான நிலையத்தில் 8 ஆண்டுகளாக சோதனை பணிகளில் திறம்பட செயல்பட்டு வந்த 3 மோப்ப நாய்கள் இன்றுடன் ஓய்வு பெற்றன.

சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் விமான நிலையத்தில் வெடிகுண்டு, வெடி பொருட்கள் உள்ளிட்டவற்றை விரைந்து கண்டறிய மோப்ப நாய்களை பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை விமான நிலைய மோப்ப நாய் பிரிவில் மொத்தம் ஒன்பது மோப்ப நாய்கள் பணியாற்றி வருகின்றன. இந்த நிலையில், கடந்த எட்டு ஆண்டுகளாக சென்னை விமான நிலையத்தில் திறம்பட பணியாற்றி வந்த கோல்டன் ரெட் ரீவர் வகையைச் சேர்ந்த ‘ஆஷா’ என்ற பெண் மோப்ப நாய், லாப்ரடார் வகையைச் சார்ந்த ‘ஸ்வீட்டி’ என்ற பெண் மோப்ப நாய், காக்கர் ஸ்பேனியல் வகையைச் சேர்ந்த ‘மேக்ஸ்’ என்ற ஆண் மோப்ப நாய் ஆகிய மூன்றும் இன்றுடன் பணியிலிருந்து ஓய்வு பெற்றன.

இதையும் படிக்க :  மதுவால் கணவன் மனைவி இடையே சண்டை - தற்கொலை செய்துக்கொண்ட கணவன் !

இந்த நிலையில், சென்னை பழவந்தாங்கலில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை அலுவலகத்தில் மூன்று மோப்ப நாய்களுக்கும் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற மூன்று மோப்ப நாய்களுக்கும் பதக்கம் மற்றும் மாலைகள் அணிவித்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மத்திய தொழில் பாதுகாப்பு படை டிஐஜி பொன்னி, சென்னை விமான நிலைய இயக்குநர் ராஜா கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டு மூன்று மோப்ப நாய்களையும் கௌரவித்தனர். மேலும், மூன்று மோப்ப நாய்களுக்கும் கேக் வெட்டி, சிவப்பு கம்பளம் விரித்து, மலர் தூவி வழி அனுப்பி வைத்தனர்.

ஓய்வு பெற்ற ஆஷா என்ற மோப்ப நாய் சென்னை விமான நிலையத்தில் 10,216 கவனிப்பின்றி விடப்பட்ட பொருட்களை சோதனை செய்ததுடன், 1,048 வாகனங்கள் மற்றும் 1,248 முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு சோதனைகளில் ஈடுபட்டுள்ளது.

ஸ்வீட்டி என்ற மோப்ப நாய் 8,704 கேட்பாரற்று கிடந்த பொருட்களை பரிசோதித்ததுடன், 1,880 வாகனங்கள் மற்றும் 1,360 முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு சோதனைகளில் பங்கேற்றுள்ளது.

இதையும் படிக்க :  “ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர நலத் திட்டங்கள் அவசியம்” - ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

மேக்ஸ் என்ற மோப்ப நாய் 8,568 பொருட்கள், 1,264 வாகனங்கள் மற்றும் 1,064 முக்கிய பிரமுகர் பாதுகாப்பு சோதனைகளில் ஈடுபட்டு, வெடிகுண்டு அச்சுறுத்தல் நிலைகளில் தனிமைப்படுத்தப்பட்ட விமானங்களை பரிசோதிக்கும் பணியில் முக்கிய பங்காற்றியுள்ளது.

மூன்று மோப்ப நாய்கள் ஓய்வு பெற்றதை அடுத்து புதிதாக ராஞ்சியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை மோப்ப நாய்கள் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மூன்று மோப்ப நாய்கள் பணியில் சேர்க்கப்பட்டன. அதன்படி, லாப்ரடார் வகையைச் சேர்ந்த காண்டி என்ற பெண் மோப்ப நாய், பாந்தர் என்ற ஆண் மோப்ப நாய், காக்கர் ஸ்பேனியல் வகையைச் சேர்ந்த ஆண் மோப்ப நாய் ஆகிய மூன்றும் அதிகாரப்பூர்வமாக சென்னை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படையில் சேர்க்கப்பட்டன.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇறைச்சிக் கடைகளில் ஆடு, கோழி, மாடு வெட்டுவதற்கு தடை கோரிய மனு தள்ளுபடி
Next Article ஈரான் ஆதரவு பேச்சுகளை ‘கண்காணிக்க’ மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,683 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,078 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,999 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,683 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,078 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,999 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.