Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 30
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஆன்மீகம்»கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்!

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்!

February 28, 20262 Mins Read6 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் மாசி மகத்தையொட்டி திருத்தேரோட்டம் பிப்.28-ம் தேதி (இன்று) நடைபெற்றது.

கும்பகோணத்தில் நடைபெறும் மகாமக விழாவிற்கு சிறப்புப் பெற்ற 12 சிவன் கோயில்கள் மற்றும் 5 பெருமாள் கோயில்களில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவது மாசி மகாமகமும், ஆண்டுதோறும் நடைபெறுவது மாசி மக விழாவாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு மாசி மக விழாவையொட்டி ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், சோமேஸ்வரர், கெளதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய 6 சிவன் கோயில்களில் பிப்.21-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. வரும் மார்ச் 27-ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் வீதியுலா நடைபெறுகிறது.

இதைத்தொடர்ந்து பிப்.-28-ம் தேதி விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள் ஆகிய 4 திருத்தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை அம்மன், விநாயகர், முருகன் ஆகிய 4 சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதைதொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரின் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

இதையும் படிக்க :  திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நவம்பர் 30ல் கார்த்திகை தீபம் ஏற்ற ஹிந்து முன்னணி அழைப்பு

மார்ச் 1-ம் தேதி சண்டிகேஸ்வரர்,காலஹஸ்தீஸ்வரர் மற்றும் சோமேஸ்வரர் கோயில்களின் தேரோடும் வீதிகளில் தேரோட்டம், காசிவிஸ்வநாதர், கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர் ஆகிய 3 கோயிலின் தேரோட்டம் மகாமக குளத்தை சுற்றிலும், நடைபெறுகிறது. இதே போல் கம்பட்ட விஸ்வநாதர் கோயிலில் திருப்பணிக்கான பாலாலயம் நடைபெற்றுள்ளதால், இந்தக் கோயிலை தவிர மற்ற நாகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், கோடிஸ்வரர், அமிர்தகலசநாதர், பாணபுரீஸ்வரர், ஆகிய 5 சிவன் கோயில்களில் ஏக தின உற்சமான தீர்த்தவாரிக்கு மகா மக குளக்கரையில் எழுந்தருளுகின்றனர்.

இதைத்தொடர்ந்து மார்ச் 2-ம் தேதி 11 சிவன் கோயில் சுவாமிகள் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பட்டு, வீதியுலாவாக மகா மககுளக்கரையில் எழுந்தருளி மகல் 12 மணிக்கு மேல் 12.30 மணிக்குள் தீர்த்தவாரி நடைபெறுகிறது. மார்ச் 3.ம் தேதி இரவு ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் சுவாமி அம்பாள் திருக்கோயில் உட்பிரகாரத்தில் 6 முறையும், வீதியில் ஒரு முறை என 7 முறை வலம் வருதலும், 4-ம் தேதி இரவு சுவாமி அம்பாள் ஏகாசனத்தில் புறப்பாடு நடைபெறுகிறது.

இதையும் படிக்க :  திருப்பதி பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு.. தேவஸ்தானம் அதிரடி!

இதே போல் சக்கரபாணி, ராஜகோபாலசுவாமி, ஆதிவராகப்பெருமாள் ஆகிய 3 பெருமாள் கோயில்களில் பிப்.22-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. வரும் மார்ச் மார்ச் 1-ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் வீதியுலா நடைபெறுகிறது. பிரதான நிகழ்ச்சியான மாசி மகமான மார்ச் 2-ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.

இதே போல் மார்ச் 2-ம் தேதி காலை பெருமாள் உபயநாச்சியாருடன் காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் வீதியுலா, தொடர்ந்து பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்சவமும், தீர்த்தவாரி, இரவு 11 மணிக்கு பெருமாள் உபயநாச்சியாருடன் ஆஸ்தானத்திற்கு எழுந்தருளல் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அந்தந்த கோயில் செயல் அலுவலர்கள், ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமார்ச் 3-ல் சந்திரகிரகணம்: பழநி முருகன் கோயிலில் காலை 10.30 வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி
Next Article 38 அடி உயரம், 65 டன் எடையுடைய ஐம்பொன்னாலான அம்மன் சிலை – கும்பகோணத்தில் வடிவமைப்பு

Related Posts

ஆன்மீகம்

உதகையில் தோடர் பழங்குடியினர் கோயில் கும்பாபிஷேக திருவிழா: பாரம்பரிய நடனமாடி வழிபாடு

March 31, 2026
ஆன்மீகம்

ஜோதிட நாள்காட்டி 31.03.2026 | பங்குனி 17

March 31, 2026
ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் @ 31 மார்ச் 2026

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.