Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, May 5
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»ஜிம்​பாப்வே அணியை வீழ்த்தியது இந்தியா – அரை இறு​தி வாய்ப்பு தக்க​வைப்பு

ஜிம்​பாப்வே அணியை வீழ்த்தியது இந்தியா – அரை இறு​தி வாய்ப்பு தக்க​வைப்பு

February 27, 20265 Mins Read11 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 8 சுற்​றில் நேற்று சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பி​யான இந்​தி​யா, ஜிம்​பாப்வே அணி​கள் மோதின. அரை இறுதி வாய்ப்பை பெற வேண்​டு​மா​னால் இந்த ஆட்​டத்​தில் வெற்றி பெற்​றாக வேண்​டும் என்ற நெருக்​கடி​யில் களமிறங்​கிய இந்​திய அணி பேட்​டிங் செய்தது.

இந்​திய அணி​யில் வாஷிங்​டன் சுந்​தர், ரிங்கு சிங் ஆகியோர் நீக்​கப்​பட்டு அக்​சர் படேல், சஞ்சு சாம்​சன் சேர்க்கப்​பட்​டனர். பேட்​டிங்கை தொடங்​கிய இந்​திய அணிக்கு சஞ்சு சாம்​சன் அதிரடி தொடக்​கம் கொடுத்​தார். நரவா வீசிய 2-வது பந்​தில் சஞ்சு சாம்​சன் சிக்​ஸரும், அடுத்த பந்​தில் பவுண்​டரி​யும் விரட்​டி​னார். இதனால் முதல் ஓவரில் 13 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன. முசா​ரா​பானி வீசிய அடுத்த ஓவரில் சஞ்சு சாம்​சன் சிக்​ஸர் விளாசி​னார்.

டினோடென்டா மபோசா வீசிய 3-வது ஓவரில் அபிஷேக் சர்மா 3 பவுண்​டரி​கள், ஒரு சிக்​ஸரை விளாசி​னார். சஞ்சு சாம்​சன் தனது பங்​குக்கு ஒரு பவுண்​டரி விரட்ட இந்த ஓவரில் மட்​டும் 23 ரன்​கள் குவிக்​கப்​பட்​டன. மட்​டையை சுழற்​றிய சஞ்சு சாம்​சன் 15 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரி​யுடன் 24 ரன்​கள் எடுத்த நிலை​யில் முசா​ரா​பானி பந்தை டீப் மிட்விக்​கெட் திசை​யில் விளாசிய போது ரியான் பரூலிடம் கேட்ச் ஆனது.

முதல் விக்​கெட்​டுக்கு சஞ்சு சாம்​சன், அபிஷேக் சர்மா ஜோடி 3.4 ஓவர்​களில் 48 ரன்​கள் சேர்த்​தது. இதையடுத்து களமிறங்​கிய இஷான் கிஷன், அபிஷேக் சர்​மாவுடன் இணைந்து மட்​டையை சுழற்​றி​னார். பிராடு இவான்ஸ் வீசிய 5-வது ஓவரில் அபிஷேக் சர்மா தலா ஒரு பவுண்​டரி, சிக்​ஸர் பறக்​க​விட்​டார். ரிச்​சர்டு நரவா வீசிய அடுத்த ஓவரில் இஷான் கிஷன் 2 பவுண்​டரி​களை விரட்ட அபிஷேக் சர்மா கடைசி பந்​தில் சிக்​ஸர் பறக்​க​விட்​டார்.

அதிரடி​யாக விளை​யாடிய அபிஷேக் சர்மா 26 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் அரை சதம் விளாசி​னார். இது அவரது 9-வது அரை சதமாக அமைந்​தது. சிகந்​தர் ராசா வீசிய 11-வது ஓவரில் தொடர்ச்​சி​யாக தலா ஒரு சிக்ஸர், பவுண்​டரி விரட்​டிய இஷான் கிஷன் அடுத்த பந்தில் பேக்​வேர்டு பாயின்ட் திசை​யின் நின்ற நரவா​விடம் எளி​தாக பிடி​கொடுத்து வெளி​யேறி​னார். அவர் 38 ரன்​கள் சேர்த்​தார்.

இதையடுத்து களமிறங்​கிய சூர்​யகு​மார் யாதவ் 8 ரன்களில் இருந்த போது பிராடு இவான்ஸ் வீசிய பந்​தில் கொடுத்த கேட்ச்சை பைன் லெக் திசை​யில் முசா​ரா​பானி தவற​விட்​டார். டினோடென்டா மபோசா வீசிய 13-வது ஓவரின் முதல் 2 பந்​துகளை பவுண்​டரிக்​கும் சிக்​ஸருக்​கும் விளாசி​னார் சூர்​யகு​மார் யாதவ். இதே ஓவரின் 4-வது பந்தை பவுண்​டரிக்கு விரட்​டிய அபிஷேக் சர்மா கடைசி பந்​தில் லாங் ஆன் திசை​யில் நின்ற சிகந்​தர் ராசா​விடம் கேட்ச் கொடுத்து ஆட்​ட​மிழந்​தார்.

அபிஷேக் சர்மா 30 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 4 பவுண்டரிகளு​டன் 55 ரன்​கள் எடுத்​தார். இதையடுத்து களமிறங்​கிய ஹர்​திக் பாண்​டி​யா, ரியான் பரூல் வீசிய 14-வது ஓவரில் லாங் ஆன் திசை​யில் சிக்​ஸர் விளாசி​னார். மறு​புறம் அதிரடி​யாக விளை​யாடிய சூர்​யகு​மார் யாதவ் 13 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 33 ரன்​கள் விளாசிய நிலை​யில் ரிச்​சர்டு நரவா பந்​தில், தசின்கா முசிகி​வா​விடம் கேட்ச் கொடுத்து ஆட்​ட​மிழந்​தார்.

இதையும் படிக்க :  வங்காளதேச அணிக்கு எதிரான ஆசிய கோப்பை T 20 கிரிக்கெட் போட்டி இந்தியா வெற்றி

இதன் பின்​னர் ஹர்​திக் பாண்​டி​யா​வுடன் இணைந்து திலக் வர்​மா​வும் அதிரடி​யாக விளை​யாடி​னார். பிராடு இவான்ஸ் வீசிய 17-வது ஓவரில் திலக் வர்மா எக்​ஸ்​டிரா கவர் திசையில் சிக்​ஸர் விளாசி​னார். ரிச்​சர்டு நரவா வீசிய 19-வது ஓவரில் திலக் வர்மா தொடர்ச்​சி​யாக 2 சிக்​ஸர்​களை விளாச இந்த ஓவரில் 21 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன.

பிராடு இவான்ஸ் வீசிய கடைசி ஓவரில் ஹர்​திக் பாண்டியா 2 சிக்​ஸர்​களை விளாசி அசத்​தி​னார். மட்டையை சுழற்றிய ஹர்​திக் பாண்​டியா 23 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 50 ரன்​களும், திலக் வர்மா 16 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 44 ரன்களும் விளாச 20 ஓவர்​கள் முடி​வில் இந்​திய அணி 4 விக்கெட்​கள் இழப்​புக்கு 256 ரன்​கள் குவித்​தது.

இதன் மூலம் டி 20 உலகக் கோப்பை வரலாற்​றில் அதிக ரன்கள் வேட்​டை​யாடிய 2-வது அணி என்ற சாதனையை இந்​தியா படைத்​தது. இந்த வகை சாதனை​யில் 2007-ம் ஆண்டு கென்​யா​வுக்கு எதி​ராக இலங்கை அணி 260 ரன்கள் குவித்​தது முதலிடத்​தில் உள்​ளது. மேலும் டி 20 உலகக் கோப்பை வரலாற்​றில் இந்​திய அணி​யின் அதிகபட்ச ரன் குவிப்​பாக​வும் இது அமைந்​தது.

இதற்கு முன்​னர் 2007-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடரில் இங்​கிலாந்து அணிக்கு எதி​ராக இந்​திய அணி 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 218 ரன்​கள் சேர்த்​திருந்​தது. 257 ரன்கள் இலக்​குடன் பேட் செய்த ஜிம்​பாப்வே அணி 20 ஓவர்களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 184 ரன்​கள் எடுத்து தோல்வி அடைந்​தது.

அதி​கபட்​ச​மாக தொடக்க வீர​ரான பிரையன் பென்​னட் 59 பந்​துகளில், 6 சிக்​ஸர்​கள், 8 பவுண்​டரி​களு​டன் 97 ரன்​கள் விளாசி கடைசி வரை ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். தடிவான்ஷே மரு​மானி 20, டியோன் மையர்ஸ் 6, சிகந்​தர் ராசா 31, ரியான் பரூல் 0, டோனி முன்​யோங்கா 11, தசிங்கா முசிகிவா 7 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழந்​தனர்.

இந்​திய அணி தரப்​பில் அர்​ஷ்தீப் சிங் 3 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். வருண் சக்​ர​வர்த்​தி, அக்​சர் படேல், ஷிவம் துபே ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர். 72 ரன்கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற இந்​திய அணிக்கு சூப்பர் 8 சுற்றில் இது முதல் வெற்றியாக அமைந்தது.

இதன் மூலம் 2 புள்ளிகளுடன் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. வரும் 1ம் தேதி இந்திய தனது கடைசி ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகளுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி அரை இறுதியில் கால்பதிக்கும்.

26 ரன்​களில் தப்​பித்த இஷான்

இஷான் கிஷன் 26 ரன்​களில் இருந்த போது ஆட்டமிழப்பதில் இருந்து தப்​பித்​தார். பிரையன் பென்​னட் வீசிய 9-வது ஓவரின் முதல் பந்தை பந்தை டீப் பேக்​வேர்டு பாயின்ட் திசை​யில் இஷான் கிஷன் விளாசிய போது அங்கு நின்ற முசிகிவா கேட்ச்சை தவற​விட்​டார். எனினும் இந்த வாய்ப்பை இஷான் கிஷன் சரிவர பயன்​படுத்​திக் கொள்​ள​வில்​லை. அவர், 24 பந்​துகளில், 38 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஆட்​ட​மிழந்​தார்.

இதையும் படிக்க :  ஆசிய லீ மான்ஸ் தொடர் அஜித்குமாரின் புதிய அணி அறிவிப்பு

26 டாட் பால்​கள்

சூப்​பர் 8 சுற்​றில் ஜிம்​பாப்வே அணிக்கு எதி​ரான ஆட்டத்தில் இந்​திய அணி 27 பந்​துகளில் மட்​டுமே ரன்​கள் சேர்க்கவில்​லை. இதன் மூலம் டி 20 உலகக் கோப்​பை​யில் குறைந்த டாட் பந்​துகளை கொண்ட அணி​களின் சாதனையை தென் ஆப்​பிரிக்கா​வுடன் இந்​திய அணி பகிர்ந்து கொண்​டது. தென் ஆப்​பிரிக்க அணி 2106-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்​பை​யில் இங்​கிலாந்​துக்கு எதிராக 26 பந்​துகளை டாட் பாலாக வைத்​திருந்​தது.

17 சிக்​ஸர்​கள்

சூப்​பர் 8 சுற்​றில் ஜிம்​பாப்வே அணிக்கு எதி​ராக இந்​திய அணி 17 சிக்​ஸர்​களை பறக்​க​விட்​டது. டி20 உலகக் கோப்​பை​யில் ஓர் இன்​னிங்​ஸில் இந்​திய அணி அதிக சிக்​ஸர்​களை விளாசுவது இதுவே முதன்​முறை. இதற்கு முன்​னர் 2024ம் ஆண்டு டி 20 உலகக் கோப்​பை​யில் ஆஸ்திரேலியாவுக்கு எதி​ராக இந்​திய அணி 15 சிக்​ஸர்​கள் அடித்​திருந்​தது.

சிக்​ஸர் வேட்டை

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்​திய அணி இது​வரை 63 சிக்​ஸர்​களை விளாசி​யுள்​ளது. டி 20 உலகக் கோப்பை வரலாற்​றில் இந்​திய அணி ஒரு தொடரில் அதிக சிக்​ஸர்​களை விளாசுவது இதுவே முதன்​முறை. இதற்கு முன்​னர் கடந்த 2024-ம் ஆண்டு தொடரில் இந்​திய அணி 61 சிக்​ஸர்​களை பறக்​க​விட்​டிருந்​தது. இந்த வகை சாதனையில் நடப்பு உலகக் கோப்பை தொடரில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 66 சிக்​ஸர்​களை விளாசி முதலிடத்தில் உள்​ளது.

31 பந்​துகளில் 84 ரன்​கள்

ஹர்​திக், திலக் ஜோடி 5-வது விக்​கெட்​டுக்கு 31 பந்​துகளில் 84 ரன்​களை குவித்து மிரட்​டியது. தப்​பித்​தது இந்​திய அணி’ குரூப் 1-ல் நேற்று அகம​தா​பாத்​தில் நடை​பெற்ற ஆட்டத்தில் தென் ஆப்​பிரிக்க அணி 9 விக்​கெட்​கள் வித்தியாசத்​தில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணியை வீழ்த்தி​யது.

இந்த ஆட்​டத்​தின் முடி​வால் இந்​திய அணி மீதான அழுத்தம் குறைந்​தது. தென் ஆப்​பிரிக்க அணி வெற்றி பெற்​ற​தால் இந்​திய அணிக்கு ரன் ரேட் சிக்​கல் இல்​லாமல் போனது. ஜிம்​பாப்வே அணியை வீழ்த்​தி​யதன் மூலம் இந்திய அணி 2 புள்​ளி​களை பெற்​றுள்​ளது.

மேற்கு இந்​தி​யத் தீவு​களும் 2 புள்​ளி​களி​லேயே தொடர்கிறது. இந்த இரு அணி​களும் தங்​களது கடைசி ஆட்​டத்​தில்​ நேருக்​கு நேர்​ மோதுகின்​றன. வரும்​ 1ம்​ தேதி நடை​பெறும்​ இந்​த ஆட்​டத்​தில்​ வெற்​றி பெறும்​ அணியே கடைசி அணி​யாக அரை இறுதி சுற்றில் கால்பதிக்கும்.

28 ஆயிரம் ரசிகர்கள்

இந்த ஆட்டத்தை காண்பதற்கு சேப்பாக்கம் மைதானத்துக்கு நேற்று 28, 247 ரசிகர்கள் வந்திருந்தனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article“தேர்தல் பிரச்சார காலத்தை நீட்டிக்க வேண்டும்” – தலைமை தேர்தல் ஆணையருக்கு சீமான் கடிதம்
Next Article மே.இ.தீவுகளை தோற்கடித்தது தென் ஆப்பிரிக்கா! அரை இறுதிக்கு முன்னேற்றம்!

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,505 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,012 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,971 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,505 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,012 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,971 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.