Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, May 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஆன்மீகம்»விழுப்புரம் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொற்றவை சிற்பங்கள் கண்டுபிடிப்பு

விழுப்புரம் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொற்றவை சிற்பங்கள் கண்டுபிடிப்பு

February 27, 20262 Mins Read27 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மரக்காணம், செஞ்சி பகுதிகளில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொற்றவை சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் அண்மையில் மரக்காணம் அருகே உள்ள குரும்பரம், செஞ்சி அருகே உள்ள மேல்சித்தாமூர் ஆகிய பகுதிகளில் கள ஆய்வில் ஈடுபட்டார். அப்போது பல்லவர் காலத்தைச் சேர்ந்த (1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த) கொற்றவை சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இதுபற்றி ஆய்வாளர் செங்குட்டுவன் கூறுகையில், குரும்பரம் வனப்பகுதிக்கு அருகாமையில் உள்ள விளைநிலத்தில் பலகைக் கல்லால் ஆன கொற்றவை சிற்பம் காணப்படுகிறது. எட்டு கரங்களுடன் எருமைத் தலைமீது நின்றிருக்கிறார். அழகான முக அமைப்பு, ஆடை அணிகலன்களுடன் கொற்றவை காட்சி தருகிறார். முன் வலது கரம் அபய முத்திரையுடனும், இடது கரம் தொடை மீது வைத்த நிலையிலும் காணப்படுகின்றன. சிற்பத்தின் இடதுபக்கம் கொற்றவையின் வாகனமான மான் நிற்கிறது. கால்களுக்குக் கீழே தலைப்பலி வீரனும், பூஜை செய்யும் அடியவரும் அமர்ந்து இருக்கின்றனர்.

இதையும் படிக்க :  சட்டமன்றத் தேர்தல்: தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சுதந்திர புலிகள் இயக்கம் ஆதரவு

அதேபோல் செஞ்சி அருகே உள்ள மேல்சித்தாமூர் கிராமத்தில் சமணக் கோயில்கள், சமணர் மடம் ஆகியவை அமைந்துள்ளன. இங்குள்ள ஏரிக்கரை மற்றும் சுடுகாட்டிற்கு மத்தியில் கொற்றவை சிற்பம் அமைந்துள்ளது. முன் இரண்டு கரங்களும் தொடை மீது வைத்த நிலையிலும், பின் வலக்கரங்களில் நீண்ட சூலாயுதம், பிரயோகச் சக்கரம் காணப்படுவதும் சிறப்பிற்கு உரியதாகும். சிற்பத்தின் மேல் இடது மூலையில் சிறிய மான் இடம் பெற்றுள்ளது. இடது கால் நேராக நிற்க, வலது காலை சற்று மடக்கியும், மெலிந்த இடையுடனும் கொற்றவை நளினமாக நிற்கிறார். முழங்கால் கீழே மண்ணில் புதைந்திருக்கிறது.‌ இதனால் தலைப்பலி வீரன் அடியவர் உருவங்களை முழுமையாகக் காண இயலவில்லை.

இதையும் படிக்க :  தமிழகத்தில் பள்ளிக் கல்வி துறை மிகவும் மோசமான நிலையில் உள்ளது - அர்ஜூன் சம்பத் !

மேற்காணும் இரண்டு சிற்பங்களும் பல்லவர் காலத்தைச் (கி.பி.8ஆம் நூற்றாண்டு) சேர்ந்தவை ஆகும். 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. இந்த சிற்பம் வானமே கூரையாக திறந்த வெளியில் நின்றுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே பல இடங்களில் கொற்றவை சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கொற்றவை வழிபாடு இந்த மாவட்டத்தில் சிறப்பாக இருந்திருக்கிறது. ஆயிரம், ஆண்டுகளைக் கடந்து இன்றும் தொடர்கிறது என்பதற்கு குரும்பரம், மேல்சித்தாமூர் சிற்பங்கள் எடுத்துக்காட்டுகளாக இருக்கின்றன” என கூறினார். இந்த ஆய்வின் போது பிடாகம் ப.தமிழழகன், புதுச்சேரி எம்.நீலமேகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி நியமனம்
Next Article 5 மாத குழந்தை உயிரிழப்பு – தாய் எடுத்த விபரீத முடிவு; காவல்துறை தீவிர விசாரணை

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,557 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,036 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,557 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,036 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.