2026ஆம் ஆண்டு தொடங்கியதும், ஜனவரி மாதத்தில் தங்கம் விலை பல முறை அதிகரித்து புதிய புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.
சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை தாண்டியுள்ளதால் சாமானிய மக்கள் நகையை நினைத்து கூட பார்க்கமுடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் நேற்று இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,930க்கும் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,19,440க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே சென்ற தங்கம் விலை ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்தை மீண்டும் தொட்டுவிடுமோ என நினைத்து கொண்டிருந்த நிலையில் இன்று தங்கம் விலை இறங்கு முகத்தில் உள்ளது.
அதன் படி, இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.14,940க்கும் சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல, 18 காரட் தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.12,765க்கும், ஒரு சவரன் ரூ.1,02,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.295க்கும், ஒரு கிலோ ரூ.2,95,000க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

