22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 1,19,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த வாரத்தில் தொடர்ந்து 3 நாட்கள் குறைந்த தங்கம் விலை அடுத்த 3 நாட்களில் அடுத்தடுத்து ஏற்றம் கண்டு வருகிறது. தங்கம் விலையேற்றம் ஏற்கனவே கணிக்கப்பட்டது தான் என்றாலும், இன்னும் ஓரிரு நாட்களுக்குள் ஒரு சவரன் ரூ. 1.20 லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு உலகளாவிய வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அமெரிக்க வரி விகிதம் அதிகரிப்பு, உலக நாடுகளிடையேயான போர் பதற்றங்கள் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகின்றன.
கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் தங்கம் விலை விறுவிறு ஏற்றம் கண்டு ஆண்டு இறுதிக்குள் ரூ. 2 லட்சத்தை தொடும் என்று நிபுணர்கள் கணித்திருக்கின்றனர். இருப்பினும், டிரம்ப் நிர்வாகத்தில் நல்ல முடிவு, போர்சூழலில் மாற்றம் போன்றவை நிகழ்ந்தால் தங்கம் விலை குறைய வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
தங்கம் விலை
நேற்று (பிப். 23) ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 180 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,860க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ. 30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 14,890க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ. 1,440 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,18,880க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ. 240 உயர்ந்து ரூ. 1,19,120க்கு விற்கப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை சில நாட்களாக மாற்றமின்றி விற்கப்பட்ட நிலையில் கடந்த வார இறுதியில் கிராமுக்கு ரூ. 20 அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து நேற்றும் ரூ. 10 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 300க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று ரூ. 10 குறைந்து ஒரு கிராம் ரூ. 290க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, இன்று கிலோவுக்கு ரூ. 10,000 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,90,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம்
ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் – ரூ. 14,890
ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் – ரூ. 1,19,120
வெள்ளி 1 கிராம் – ரூ. 290
வெள்ளி 1 கிலோ – ரூ. 2,90,000

