Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 17
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»தென் ஆப்பிரிக்காவிடம் இந்திய அணி தோற்றது எப்படி?

தென் ஆப்பிரிக்காவிடம் இந்திய அணி தோற்றது எப்படி?

February 23, 20264 Mins Read9 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் சூப்பர் 8 சுற்​றில் நடப்பு சாம்​பிய​னான இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் நேற்று அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில் தென் ஆப்பிரிக்காவுடன் மோதி​யது.

முதலில் பேட் செய்த தென் ஆப்​பிரிக்க அணிக்கு தொடக்கமே அதிர்ச்​சி​யாக இருந்​தது. குயிண்​டன் டி காக் 6 ரன்​களில் ஜஸ்​பிரீத் பும்ரா பந்​தில் போல்​டா​னார். கேப்​டன் எய்​டன் மார்க்​ரம் 4 ரன்​களில் அர்​ஷ்தீப் சிங் பந்​தில் மிட் ஆஃப் திசை​யில் நின்ற ஹர்​திக் பாண்​டி​யா​விடம் எளி​தாக கேட்ச் கொடுத்து நடையை கட்​டி​னார். ரியான் ரிக்கெல்டன் 7 ரன்​கள் எடுத்த நிலை​யில் மிட் ஆஃப் திசையில் நின்ற ஷிவம் துபே​விடம் பிடி​கொடுத்து வெளியேறி​னார்.

4 ஓவர்​களில் 20 ரன்​களுக்கு 3 விக்​கெட்​களை இழந்து தென் ஆப்​பிரிக்க அணி நெருக்​கடியை சந்​தித்​தது. ஆனால் 4-வது விக்​கெட்​டுக்கு இணைந்த டேவிட் மில்​லர், டெவால்ட் பிரேவிஸ் ஜோடி தாக்​குதல் ஆட்​டம் மேற்​கொண்டு இந்​திய அணி​யி​யின் பந்​து​வீச்சு துறைக்கு நெருக்​கடியை கடத்தியது.

வருண் சக்​ர​வர்த்தி வீசிய 5-வது ஓவரில் டேவிட் மில்​லர் 2 பவுண்​டரி​கள் விரட்ட 11 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன. அர்​ஷ்தீப் சிங் வீசிய அடுத்த ஓவரில் 2 பவுண்​டரி​களு​டன் 10 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன. தொடர்ந்து வாஷிங்​டன் சுந்​தர் வீசிய 7-வது ஓவரில் 11 ரன்​கள் எடுக்​கப்​பட்​டன.

இதன் பின்​னர் வருண் சக்​ர​வர்த்தி வீசிய 9-வது ஓவரில் டேவிட் மில்​லர் சிக்​ஸர் விளாச, டெவால்ட் பிரே​விஸ் தலா ஒரு சிக்​ஸர், பவுண்​டரியை விரட்​டி​னார். இந்த ஓவரில் வருண் சக்​ர​வர்த்தி 17 ரன்​களை வாரி வழங்​கி​னார்.

ஹர்​திக் பாண்​டிய வீசிய அடுத்த ஓவரில் டேவிட் மில்​லர் சிக்​ஸர் விளாச இந்த ஓவரில் 11 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன. 10 ஓவர்​களில் தென் ஆப்​பிரிக்க அணி 84 ரன்​கள் சேர்த்​தது. ஷிவம் துபே வீசிய அடுத்த ஓவரில் தலா ஒரு சிக்​ஸர், பவுண்​டரி​யுடன் 15 ரன்​கள் விளாசப்​பட்​டன.

அடுத்த ஓவரை வீசிய வருண் சக்​ர​வர்த்தி 12 ரன்​களை விட்டுக்​கொடுத்​தார். அதிரடியாக விளையாடிய டேவிட் மில்லர் 26 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் அரை சதம் அடித்தார். மட்​டையை சுழற்​றிய டெவால்ட் பிரே​விஸ் 29 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 45 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஷிவம் துபே பந்​தில் மிட்விக்​கெட் திசை​யில் அபிஷேக் சர்​மா​விடம் பிடி​கொடுத்து ஆட்ட​மிழந்​தார். 4-வது விக்​கெட்​டுக்கு டேவிட் மில்​லர், டெவால்ட் பிரே​விஸ் ஜோடி 51 பந்​துகளில் 97 ரன்​களை வேட்டை​யாடியது.

இதையும் படிக்க :  அஜித்குமார் ரேஸிங் அணி Asia Le Mans தொடரில் கலந்து கொள்கிறது

தனது 9-வது அரை சதத்தை அடித்த டேவிட் மில்​லர் 35 பந்துகளில், 3 சிக்​ஸர்​கள், 7 பவுண்​டரி​களு​டன் 63 ரன்​கள் விளாசிய நிலை​யில் வருண் சக்​ர​வர்த்தி பந்​தில் லாங் ஆஃப் திசை​யில் நின்ற திலக்​வர்​மா​விடம் கேட்ச் கொடுத்து ஆட்​ட​மிழந்​தார். இதையடுத்து களமிறங்​கிய கார்​பின் போஷ் 2 ரன்​களில் அர்​ஷ்தீப் சிங் பந்​தில் வெளி​யேறி​னார்.

கார்​பின் போஷ் 5 ரன்​களில் பும்ரா பந்​தில் அவரிடமே பிடி​கொடுத்து வெளி​யேறி​னார். 14 முதல் 19 ஓவர் வரையி​லான காலக்​கட்​டத்​தில் தென் ஆப்​பிரிக்க அணி​யின் பந்​து​வீச்சு வெகு​வாக கட்​டுப்​படுத்​தப்​பட்டு இருந்​தது. இந்த 6 ஓவர்களில் அந்த அணி 39 ரன்​கள் மட்​டுமே எடுத்​தது. 19 ஓவர்​களில் தென் ஆப்​பிரிக்க அணி 167 ரன்​கள் எடுத்திருந்தது.

ஹர்​திக் பாண்​டியா வீசிய கடைசி ஓவரில் டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் 2 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரி உட்பட 20 ரன்​களை வேட்​டை​யாடி​னார். முடி​வில் 20 ஓவர்​களில் தென் ஆப்​பிரிக்க அணி 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 187 ரன்​கள் குவித்தது. டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் 24 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரி​யுடன் 44 ரன்​கள் விளாசி​னார்.

பந்​து​வீச்​சில் இந்​திய அணி தரப்​பில் ஜஸ்​பிரீத் பும்ரா 4 ஓவர்களை வீசி 15 ரன்​களை மட்​டும் விட்​டுக்​கொடுத்து 3 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். அர்​ஷ்தீப் சிங் 4 ஓவர்​களை வீசி 28 ரன்​களை வழங்கி 2 விக்​கெட்​களை கைப்பற்றினார். வருண் சக்​ர​வர்த்தி 4 ஓவர்​களை வீசி 47 ரன்​களை தாரை வார்த்த நிலை​யில் ஒரு விக்​கெட் எடுத்தார். ஹர்​திக் பாண்​டியா 4 ஓவர்​களை வீசி 45 ரன்​களை வாரி வழங்​கிய நிலை​யில் விக்​கெட் ஏதும் கைப்பற்ற​வில்​லை. ஷிவம் துபே 2 ஓவர்​களை வீசி 32 ரன்களை தாரை வார்த்து ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர்.

188 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த இந்​திய அணி தொடக்கத்​திலேயே ஆட்​டம் கண்​டது. எய்​டன் மார்க்​ரம் வீசிய முதல் ஓவரிலேயே இஷான் கிஷன் 4 பந்​துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்​காமல் ஆட்​ட​மிழந்​தார். மார்கோ யான்​சன் வீசிய அடுத்த ஓவரில் திலக் வர்மா ஒரு ரன்​னில் நடையை கட்​டி​னார். அபிஷேக் சர்மா 12 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 2 பவுண்​டரி​களு​டன் 15 ரன்​கள் எடுத்த நிலை​யில் மார்கோ யான்சன் வீசிய வேகம் குறைந்த பந்தை மிட்விக்கெட் திசை​யில் விளாசிய போது கார்​பின் போஷிடம் கேட்ச் ஆனது.

இதையும் படிக்க :  “ஐபிஎல் 2026 சீசனை உற்சாகத்துடன் எதிர்நோக்கி உள்ளோம்” - கொல்கத்தா கேப்டன் ரஹானே பகிர்வு

26 ரன்​களுக்கு 3 விக்​கெட்​களை பறி​கொடுத்த இந்​திய அணி​யின் ரன் குவிப்பு வேகம் மந்​த​மானது. 4-வது விக்கெட்டுக்கு களமிறங்​கிய வாஷிங்​டன் சுந்​தர் 11 ரன்களில் நடையை கட்​டி​னார். கேப்​டன் சூர்​யகு​மார் யாதவ் 22 பந்​துகளில், 2 பவுண்​டரி​களு​டன் 18 ரன்​கள் எடுத்த நிலை​யில் கார்​பின் போஷ் வீசிய பந்தில் மிட்விக்கெட் திசை​யில் நின்ற டெவால்ட் பிரே​விஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

6-வது விக்​கெட்​டுக்கு ஷிவம் துபே, ஹர்​திக் பாண்​டியா ஜோடி இணைந்​தது. 10 ஓவர்​களில் இந்​திய அணி 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 57 ரன்​கள் சேர்த்​தது. இதையடுத்து களமிறங்​கிய ஹர்​திக்​ பாண்​டி​யா கேசவ்​ மகா​ராஜ் வீசிய11-வது ஓவரின்​ ​முதல்​ பந்​தை சிக்​ஸருக்​கு பறக்கவிட்டார்.

15-வது ஓவரை வீசிய கேசவ் மகா​ராஜ் 2 ரன்​களை மட்​டுமே விட்​டுக்​கொடுத்து 3 விக்​கெட்​களை வீழ்த்தி மிரளச் செய்தார். இந்த ஓவரின் முதல் பந்​தில் ஹர்​திக் பாண்​டி​யா, லாங் ஆஃப் திசை​யில் டிரிஸ்​டன் ஸ்டப்​ஸிடம் பிடி​கொடுத்து வெளி​யேறி​னார். ஹர்​திக் பாண்​டியா 17 பந்துகளில், ஒரு சிக்​ஸருடன் 18 ரன்​கள் எடுத்​தார். இதையடுத்து களமிறங்​கிய ரிங்கு சிங், அர்​ஷ்தீப் சிங் ஆகியோர் ரன் ஏதும் எடுக்​காமல் நடையை கட்​டினர்.

88 ரன்​களுக்கு 8 விக்​கெட்​களை இழந்த இந்​திய அணி​யின் நம்​பிக்கை தளர்ந்​தது. ரபாடா வீசிய அடுத்த ஓவரில் ஷிவம் துபே 2 சிக்​ஸர்​களை பறக்​க​விட்​டார். தொடர்ந்து கார்​பின் போஷ் வீசிய 17-வது ஓவரில் ஒரு ரன்​னும், லுங்கி நிகிடி வீசிய அடுத்த ஓவரில் 3 ரன்​னும் சேர்க்​கப்​பட்​டது. மார்கோ யான்​சன் வீசிய 19-வது ஓவரின் முதல் பந்​தில் சிக்ஸர் அடித்த ஷிவம் துபே 4-வது பந்​தில் ஃபைன் லெக் திசை​யில் லுங்கி நிகிடி​யிடம் பிடி​கொடுத்து வெளியேறினார்.

ஷிவம் துப 37 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்டரியுடன் 42 ரன்​கள் சேர்த்​தார். இதையடுத்து களமிறங்​கிய ஜஸ்​பிரீத் பும்ரா ரன் ஏதும் எடு​க்காமல் நடையை கட்​டி​னார். முடி​வில் இந்​திய அணி 18.5 ஓவர்களில் 111 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. தென் ஆப்​பிரிக்க அணி சார்​பில் மார்கோ யான்​சன் 4 விக்கெட்களையும், கேசவ் மகா​ராஜ் 3 விக்​கெட்​களை​யும் வீழ்த்​தினர்.

கார்​பின் போஷ் 2, எய்​டன் மார்க்​ரம் ஒரு விக்​கெட் கைப்பற்றினர். 76 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற தென் ஆப்​பிரிக்க அணி 2 புள்​ளி​களை பெற்​றது. இந்​திய அணி தனது அடுத்த ஆட்​டத்​தில் வரும் 26-ம் தேதி ஜிம்பாப்வே​யுடன் மோதுகிறது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசூப்பர் 8 சுற்றில் 76 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி
Next Article ஹாக்கியில் இந்தியா மீண்டும் தோல்வி

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.