அருள்மிகு ஸ்ரீ பூங்காவன முத்துமாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவின் போது கலசத்தைச் சுற்றிலும் சுமார் 30க்கும் மேற்பட்ட கருடர்கள் வானில் வட்டமிட்டன. அப்போது பக்தர்கள் மனமுருகி வழிபட்டனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே லாடனேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பூங்காவன முத்துமாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு திருப்பணி வேலைகள் நடந்து வந்தன.
திருப்பணி வேலைகள் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று காலை விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் காலை தொடங்கியது. சிவாச்சார்யார்கள் இன்று புனித நீர் அடங்கிய கலசங்களை சுமந்து யாகசாலையை வலம் வந்தனர்.
கோவில் விமானத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டதும், அப்பொழுது 30-க்கும் மேற்பட்ட கருடர்கள் கோவிலுக்கு மேலே வட்டமிட்டதை கண்டு பக்தர்கள் மனம் உருகி சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கலசங்களுக்கு புனித நீரானது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்பு ஸ்ரீ பூங்காவன முத்துமாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவில் விமானத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டதும், அப்பொழுது 30-க்கும் மேற்பட்ட கருடர்கள் கோவிலுக்கு மேலே வட்டமிட்டதை கண்டு பக்தர்கள் மனம் உருகி சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கலசங்களுக்கு புனித நீரானது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்பு ஸ்ரீ பூங்காவன முத்துமாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

