Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»‘‘வளர்ச்சியடைந்த பாரதம் எனும் இலக்கை எட்டிப்பிடிக்க உதவும் பட்ஜெட்’’ – டிடிவி.தினகரன் வரவேற்பு

‘‘வளர்ச்சியடைந்த பாரதம் எனும் இலக்கை எட்டிப்பிடிக்க உதவும் பட்ஜெட்’’ – டிடிவி.தினகரன் வரவேற்பு

February 2, 20263 Mins Read17 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

“மத்திய அரசின் இந்த நிதிநிலை அறிக்கை வளர்ச்சியடைந்த பாரதம் எனும் இலக்கை எளிதாக எட்டிப்பிடிக்க அனைத்து வகையிலும் உதவியாக இருக்கும்” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய தலைமையில், இந்தியாவின் நிதிநிலை அறிக்கையைத் தொடர்ந்து 9வது ஆண்டாக தாக்கல் செய்திருப்பதோடு, அதிக முறை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த நிதியமைச்சர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கும் முன்னேறியிருக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எங்களது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைவருக்குமான வளர்ச்சி எனும் உன்னத கோட்பாட்டை முன்னிறுத்தித் தயாரிக்கப்பட்டிருக்கும் மத்திய நிதிநிலை அறிக்கை, வளர்ச்சியடைந்த பாரதம் எனும் இந்தியாவின் இலக்கை எளிதாக எட்டிப்பிடிப்பதற்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக அமைந்திருப்பது வரவேற்புக்குரியது.

ஆதிச்சநல்லூர் உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தளமாக மேம்படுத்தப்படுவதோடு, கலாச்சார செழுமையை விளக்கும் வகையில் கலாச்சார மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு தமிழர்களின் பாரம்பரியத்தைப் பெருமைப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

அதோடு ஐதராபாத் முதல் சென்னை வரையிலும், சென்னை முதல் பெங்களூரு வரையிலும் அதிவேக ரயில் வழித்தடங்கள், பழவேற்காடு ஏரியில் பறவைகளைக் காண பிரத்தியேக காட்சி மையம், பொதிகை மலையில் மலையேற்றத்தை ஊக்குவிக்கத் திட்டம் என தமிழகத்திற்கென பல்வேறு திட்டங்கள் மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

விவசாய வளங்களை அணுக ஒருங்கிணைந்த அமைப்பு உருவாக்கம், 2030 ஆம் ஆண்டிற்குள் முந்திரி மற்றும் கோகோ உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு அடையச் செய்யவும், ஏற்றுமதிக்கான திறனை அதிகரிக்கவும் பிரத்தியேக திட்டம், தேங்காய் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் தேங்காய் ஊக்குவிக்குப்புத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் வேளாண்மை மீதான மத்திய அரசின் அக்கறையை வெளிப்படுத்துகின்றன.

இதையும் படிக்க :  தமிழக அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாக ஏற்கவில்லை - ஜாக்டோ-ஜியோ

உயர் கல்வித்துறையில் முதலீடு செய்வதன் மூலம் புதிய கல்வி நிறுவனங்கள், ஐந்து பல்கலைக்கழக நகரங்கள், மும்பை ஐஐடியுடன் இணைந்து 15 ஆயிரம் பள்ளிகள் மற்றும் 500 கல்லூரிகளில் AVGC ( Animation, Visual Effects, Gaming and Comics ) எனும் படைப்பாற்றல் ஆய்வகங்கள் போன்றவற்றோடு நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்கள் விடுதிகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு பெண் கல்வியை மேலும் ஊக்குவிக்கவும் அவர்கள் தொழில் முனைவோர்களாக உருவெடுக்கவும் வழிவகை செய்கின்றன.

எதிர்காலச் சாதனையாளர்களை உருவாக்க 10 ஆயிரம் கோடி ரூபாயில் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வளர்ச்சி நிதி அமைப்பு, உயர்தர விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சிக்கான முன்னெடுப்பு, பிரம்மாண்ட ஜவுளிப் பூங்காக்கள், காதி மற்றும் கைத்தறித் தொழில்களை வலுப்படுத்திடும் வகையில் மகாத்மா காந்தி கிராம சுயராஜ்ய திட்டம் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டங்கள் தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதோடு, வேலைவாய்ப்பையும் பெருக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தித் தந்துள்ளன.

புற்றுநோய் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு தேவையான 17 வகையான மருந்துகள் மீதான அடிப்படை சுங்க வரிக்கு முழுமையான விலக்கு, தனியார்த் துறையோடு இணைந்து நாடு முழுவதும் மருத்துவ மையங்கள், மருந்து தயாரிப்புக்கான Bio Pharma Shakti திட்டத்திற்குப் பத்தாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, ஆயுர்வேத மருந்தகங்களின் தரத்தை உயர்த்துவதோடு, ஆயுர்வேத மருத்துவத்திற்காக மூன்று கல்வி நிறுவனங்கள் என மருத்துவத்துறைக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளித்திருப்பது பாராட்டுதலுக்குரியது.

இதையும் படிக்க :  மதுராந்தகத்தை அடுத்து மதுரை... மீண்டும் தமிழ்நாடு வரும் மோடி! திருப்பரங்குன்றம் மலைக்கும் விசிட்...

தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை என்றாலும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை எளிமையாக்கியிருப்பதும், திருத்துவதற்கான கால அவகாசத்தை மார்ச் 31 ஆம் தேதி நீட்டித்திருப்பது சற்று ஆறுதலைத் தருகிறது. மேலும் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் லித்தியம் பேட்டரி மற்றும் வாகன விபத்து இழப்பீட்டுத் தொகைக்கு வரிவிலக்கு அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அடுத்த பத்து ஆண்டுகளில் செயல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் கேலோ இந்தியா திட்டம் விளையாட்டு வீரர்களுக்கு புதிய நம்பிக்கையையும் புத்துணர்வையும் அளிக்கக் கூடியதாக அமைந்துள்ளது.

இருப்பினும், தமிழக மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டங்கள், ஐஐடி கல்வி நிறுவனங்கள் போன்ற தமிழகத்திற்கென முக்கிய அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாமல் போனது சற்று ஏமாற்றத்தை அளிக்கிறது.

பாரம்பரிய தொழில்துறைகளுக்குப் புத்துயிர் அளித்தல், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை உருவாக்குதல், உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், நகரப் பொருளாதார பகுதிகளை வலுவடையச் செய்தல், நீண்டகால வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை உறுதிப் படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் மத்திய அரசின் இந்த நிதிநிலை அறிக்கை வளர்ச்சியடைந்த பாரதம் எனும் இலக்கை எளிதாக எட்டிப்பிடிக்க அனைத்து வகையிலும் உதவியாக இருக்கும் அறிக்கையாக அமைந்துள்ளது.’ எனத் தெரிவித்துள்ளார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமத்திய பட்ஜெட்டால் தமிழ்நாட்டின் சிறு தொழில்கள் அதிகம் பயன்பெறும்: எடப்பாடி பழனிசாமி
Next Article வரலாற்றுச் சிறப்​புமிக்க பட்ஜெட்! பிரதமர் நரேந்​திர மோடி புகழாரம்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.