மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் அருங்குணம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் திரு லோகேஷ் பாபு அவர்கள் ஏற்பாட்டில் இன்று 10.10.2025 ஆயுத பூஜை விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி K.மரகதம் குமரவேல் MA .MLA.EX MP அஇஅதிமுக கழக மகளிர் அணி செயலாளர் கழக செயற்குழு உறுப்பினர் அவர்கள் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு V.கார்த்திகேயன் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பின்பு 600 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு புடவைகள், பொறி, இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினர்
இந்நிகழ்வின் போது மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் திரு சம்பத் அவர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கழக
உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

