நேற்று முன் தினம் சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.87,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.10,950-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.880 உயர்ந்துள்ளது. இன்றைய விலை நிலவரம் இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.88,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.11,060-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளிவிலையும் அதிகரித்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.166-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

