நேற்றைய தினம், கரூர், தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன்.
உயிரிழந்தோரின் உடல்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினேன்.
இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்டோருக்கு அனைத்து விதங்களிலும் தமிழ்நாடு பாஜக துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அப்போது, பாஜகவின் முன்னாள் மத்திய இணை அமைச்சர் திரு. பொன் ராதாகிருஷ்ணன் அவர்களும், முன்னாள் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் திருமதி. தமிழிசை சௌந்தரராஜன் அவர்களும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திருமதி. வானதி சீனிவாசன்
அவர்களும், தமிழ்நாடு பாஜக இளைஞர் அணி தலைவர் திரு.
SG சூர்யா அவர்களும், கரூர் மாவட்ட பாஜக தலைவர் திரு. செந்தில்நாதன்
அவர்களும், மேலும் திருச்சி, கரூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட பாஜக மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

