நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.10-ம், சவரனுக்கு ரூ.80-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,230-க்கும், ஒரு சவரன் ரூ.81,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதன் மூலம் தங்கம் விலை ரூ.82,000 கீழ் வந்தது. இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உச்சத்தை எட்டி உள்ளது.
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, ஒரு சவரன் ரூ,82,320-க்கு விற்பனையாகிறது.
ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.60 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,290-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.143-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2-ம், கிலோவுக்கு ரூ.2,000-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.145-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

