இன்று தங்கம் விலை சரிவை சந்தித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரன் ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ,81,760க்கு விற்பனையாகிறது.
ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.10,220க்கு விற்பனை செய்யப்படுகிறது தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் நேற்று முன்தினம் உச்சத்தை எட்டி இருந்தநிலையில், நேற்று கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ. 142-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் ரூ. 141-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

