வன்முறை வெறியாட்டங்களால் சூழப்பட்டுள்ள நமது அண்டை நாடான நேபாளத்தில், கலவரங்களுக்குள் சிக்கிய அப்பாவிப் பொதுமக்களைத் தனது உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றியுள்ளார் நெல்லையைப் பூர்வீகமாகக் கொண்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் திரு. செந்தில் தொண்டைமான் அவர்கள்.
நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் அமைந்துள்ள Hyatt என்ற நட்சத்திர ஓட்டலைச் சுற்றி வளைத்து தீ வைத்துக் கொளுத்திய போராட்டக்காரர்கள், அங்கு தங்கியிருந்த மக்களையும் தாக்கி அவர்களின் உடைமைகளைச் சூறையாடிக் கொண்டிருந்த வேளையில், ஆபத்பாந்தவனாக அம்மக்களைக் காப்பாற்றி பாதுகாப்புடன் வெளியேற்றியுள்ளார் திரு. செந்தில் தொண்டைமான் அவர்கள்.
கண்ணில் பட்டவர்களை எல்லாம் காப்பாற்றிக் கரைசேர்த்த பிறகும் கூட, தனது உயிரைக் காத்துக் கொள்ள முயலாது, இன்னும் யாரேனும் எங்காவது பயந்து ஒளிந்துள்ளார்களா என்ற நோக்கில் அவர் ஒவ்வொரு இடமாகத் தேடிச் செல்லும் காணொளி நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கிறது.
சமூக சமநிலையில் சிறு சறுக்கல் ஏற்படும் நேரங்களில் எல்லாம் மனித மனதின் புனிதம் வெளிப்படும் என்பதற்கான ஓர் அற்புத சான்று இது.
தன்னலமற்ற பொதுநலத்துடன் பலர் உயிரைக் காப்பாற்றிய திரு. திரு. செந்தில் தொண்டைமான் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்!
இவ்வாறு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது X பக்கத்தில் தெரிவித்துள்ளார்

