ரஜினியை தொடர்ந்து நடிகர் விஜய் வீட்டில் தற்போது தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்
75வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வரும் 15ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதன் ஒரு பகுதியாக வரும் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை பறக்கவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதனைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதள பக்கங்களின் முகப்பு படமாக தேசியக் கொடியை வைத்தார். பின்னர் நடிகர் ரஜினிகாந்த் வீட்டிலும் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது.
இந்நிலையில், நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் தேசியக் கொடியை பறக்கவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

