பள்ளி ஆண்டுத் தேர்வுகள் அறிவிக்கப்பட்ட தேதிகளின்படி நடத்தப்படும் என தமிழக மாநில கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இந்த ஆண்டு திட்டமிட்டபடி ஆண்டுத் தேர்வுகள் நடத்தப்படும். மாணவர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என மாநில கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான ஆண்டுத் தேர்வுகள் இந்த ஆண்டு கிடையாது என்றும், 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 மற்றும் மே 13 க்கு இடையில் ஆண்டுத் தேர்வுகள் நடத்தப்படலாம் அல்லது தள்ளி வைக்கப்படவும் வாய்ப்பிருக்கும் என்று தமிழக அரசு கல்வித் துறையின் கால அட்டவணையை காட்டி சமூக வலைதளங்களில் ஆவணம் பரவியது.
இது குறித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், கண்டிப்பாக தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்தார். 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு இறுதித் தேர்வுகளும், 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகளும் கண்டிப்பாக நடத்தப்படும். குறைக்கப்பட்ட கால அளவைப் பொறுத்தவரை, நாங்கள் ஏற்கனவே பகுதிகளை 35 – 55% ஆகக் குறைத்துள்ளோம், அதன் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்படும். வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.