வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,350-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,800-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.
கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,250-க்கும் சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.90,000க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 165 ரூபாய்க்கும் கிலோவுக்கு மூவாயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

