Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, June 15
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»எஸ்.ஐ. தேர்வு முடிவை 10 நாட்கள் நிறுத்தி வைக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

எஸ்.ஐ. தேர்வு முடிவை 10 நாட்கள் நிறுத்தி வைக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

February 25, 20261 Min Read6 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழில் ஒரு வினாகூட கேட்கவில்லை என்றால் எப்படி என்று கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், காவல் உதவி ஆய்வாளர் தேர்வு முடிவை 10 நாட்களுக்கு நிறுத்திவைக்க உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த குருசாமி, ஆனந்தராஜா ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வில், பிரிவு பி பாடத் திட்டத்தில் தமிழ் வினாக்கள் இல்லை. அதற்குப் பதிலாக உளவியல் பகுதியில் இருந்து 10 வினாக்கள் கூடுதலாக கேட்கப்பட்டுள்ளன.

இதனால் பலரும் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை உள்ளது. எனவே, எஸ்.ஐ. தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதிப்பதுடன், மீண்டும் புதிதாக தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தார்.

இதையும் படிக்க :  சவரனுக்கு ரூ. 240 உயர்ந்த தங்கம் விலை - சவரன் விலை எவ்வளவு?

இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் “சுமார் 1 லட்சத்து 38 ஆயிரம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். தமிழ் தகுதித் தேர்வில் 100 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி, “தேர்வுக்கான பாடத் திட்டத்தை வழங்கி, அதிலிருந்துதான் வினாக்கள் கேட்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டில் இந்த தேர்வில் 10 வினாக்கள் தமிழில் இருந்து கேட்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு குறைந்தபட்சம் 5 வினாக்களாவது கேட்டிருக்கலாம். தேர்வர்கள் பாடத் திட்டத்துக்காக தங்களது நேரத்தை செலவு செய்து தயார் செய்யும் நிலையில், தமிழக அரசு ஒரு வினாகூட தமிழில் கேட்கவில்லை என்றால் எப்படி?” என்றார்.

இதையும் படிக்க :  சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிப்பு !

அதற்கு அரசுத் தரப்பில், “பாடத் திட்டத்தில் உள்ள அனைத்தில் இருந்தும் வினாக்களை கேட்க வேண்டும் என்றால் எப்படி? பாடத் திட்டத்தை தாண்டி வினாக்கள் கேட்கப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நீதிபதி, “தமிழ் மொழியில் பயின்றோருக்கு ஒரு மதிப்பெண்கூட அவர்களின் நிலையை மாற்றலாம் அல்லவா? இருதரப்பும் தங்களது பதில்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும். 10 நாட்களுக்கு தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டாம். தீர்ப்பு தள்ளிவைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசி.வி.சண்முகம் மீது நடவடிக்கை எடுக்க பிறப்பித்த மகளிர் ஆணைய உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்
Next Article நல்லக்கண்ணு மறைவு: நயினார் நாகேந்திரன் இரங்கல்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,630 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,051 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,997 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,630 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,051 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,997 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.