இன்றைய தினம், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களின் பிறந்தநாளையொட்டி, சென்னை பெசன்ட் நகர் பகுதியில் ‘ஸ்வச்ச் பாரத்’ நிகழ்வைத் துவக்கி வைத்தேன்.
“தூய்மை இந்தியா திட்டம் எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறதோ, அந்த அளவுக்கு நம் தேசம் பிரகாசிக்கும்” என்று கூறுவார் நம் மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்கள். நாம் அனைவரும் இந்த மாபெரும் தூய்மை இயக்கத்தில் பங்கேற்று தூய்மையான பாரதத்திற்கு வழி வகுக்க வேண்டும்!
இந்த நிகழ்வில், தமிழ்நாடு பாஜக மாநில துணைத் தலைவர் திரு.கரு.நாகராஜன் அவர்களும், பாஜக மாநில செயலாளர் திரு.வினோஜ் பி.செல்வம் அவர்களும், சென்னை கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் திரு. குமார் அவர்களும் உடன் இருந்தனர்.

