Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

2026 தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் பாஜக தலைமையிலான NDA வெற்றி பெறும் அமித்ஷா

December 8, 2025

திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில் திமுகவினரை திக்குமுக்காட செய்த ராம.ரவிக்குமார் யார்?

December 4, 2025

புதிய தொழிலாளர் சட்டங்கள் ஊழியர்களுக்கு சாதகமான அம்சங்கள்

December 1, 2025
Facebook X (Twitter) Instagram
Sunday, December 14
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»மசோதா மீது முடிவெடுக்க கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

மசோதா மீது முடிவெடுக்க கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

November 20, 20252 Mins Read387 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மசோதாக்கள் மீது முடிவெடுக்க, கவர்னர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு கால வரம்பு நிர்ணயம் செய்த விவகாரத்தில் இன்று சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு அளித்தது.

மசோதா மீது முடிவெடுக்க கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

தமிழக கவர்னர் R.N.ரவி, தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு வைத்திருப்பதாக கூறி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதை விசாரித்த நீதிமன்றம் மசோதாக்கள் மீது ஒரு மாதத்தில் இருந்து மூன்று மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என, கவர்னர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு வரம்பு நிர்ணயித்து தீர்ப்பளித்தனர்.

இந்த தீர்ப்பு குறித்து 14 கேள்விகளை எழுப்பிய ஜனாதிபதி திரவுபதி முர்மு சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார்.

இதையும் படிக்க :  ஹிந்தி மொழி தினத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து !

அந்த கடிதத்தையே வழக்காக மாற்றிய தலைமை நீதிபதி கவாய், இதன் மீது ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தும் என அறிவித்தார்.

அதன்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் எஸ்.சந்துர்கர் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்தது.

கடந்த செப்டம்பர் 11ல் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்தது.

* சட்டசபைகளால் நிறைவேற்றப்படும் மசோதாவை கவர்னர் கால வரம்பின்றி நிறுத்தி வைக்க முடியாது. கவர்னர் நீண்ட காலமாக மசோதாவை நிறுத்தி வைப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.

* அதே நேரத்தில் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், முடிவெடுக்க கவர்னருக்கு காலக்கெடு நிர்ணயிப்பது, அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள நெகிழ்வுத்தன்மைக்கு எதிரானது.

இதையும் படிக்க :  இந்து அறநிலையத்துறை கமிஷனருக்கு 1 லட்சம் அபராதம் - என்ன விவரம் !

* அரசியல் சாசனத்தின் 200வது பிரிவின்படி மசோதா மீது முடிவெடுக்க கவர்னருக்கு மூன்று வாய்ப்புகள் தான் உள்ளன. ஒப்புதல் அளிக்கலாம். அல்லது நிராகரிக்கலாம் அல்லது திருப்பி அனுப்பலாம். நான்காவது வாய்ப்பு கிடையாது.

* கவர்னர்களின் செயல்பாடுகளை நீதிமன்றங்கள் கேள்வி கேட்க முடியாது. அதே நேரத்தில் நீண்ட காலம் மசோதாவை கிடப்பில் வைத்திருந்தால் நீதிமன்றங்கள் ஆய்வு செய்ய முடியும்.

* மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் ஒவ்வொரு முறையும் நீதிமன்றங்களின் கருத்துக்களை கேட்க தேவையில்லை. வேண்டுமென்றால் மசோதா மீது நடவடிக்கை எடுங்கள் என்று கேட்டு கொள்ள முடியும்.

* மசோதா மீது முடிவெடுக்க கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

#governor DMK Fails TN SUPREME COURT OF INDIA TAMILNADU GOVT
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகடலோர பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க வேதாரண்யம் பகுதியில் “சாகர் கவாச்” பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி
Next Article 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா இன்று கோலாகலாக தொடங்குகிறது

Related Posts

2026 தேர்தல்

2026 தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் பாஜக தலைமையிலான NDA வெற்றி பெறும் அமித்ஷா

December 8, 2025
Editor's Picks

திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில் திமுகவினரை திக்குமுக்காட செய்த ராம.ரவிக்குமார் யார்?

December 4, 2025
Editor's Picks

புதிய தொழிலாளர் சட்டங்கள் ஊழியர்களுக்கு சாதகமான அம்சங்கள்

December 1, 2025
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,089 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,874 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,826 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,089 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,874 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,826 Views
Our Picks

2026 தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் பாஜக தலைமையிலான NDA வெற்றி பெறும் அமித்ஷா

December 8, 2025

திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில் திமுகவினரை திக்குமுக்காட செய்த ராம.ரவிக்குமார் யார்?

December 4, 2025

புதிய தொழிலாளர் சட்டங்கள் ஊழியர்களுக்கு சாதகமான அம்சங்கள்

December 1, 2025

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2025 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.