வாரத் தொடக்கத்திலேயே தங்கம் விலை குறைந்துள்ளது.
நேற்று முன் தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,050க்கும் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,20,400க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து வார தொடக்கமான இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.14,950க்கும் சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.13,000க்கும் சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.104,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.290க்கும், ஒரு கிலோ ரூ.2,90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

