தங்கம் விலை இன்று மீண்டும் சரிவடைந்துள்ளது. ஈரான் போர் காரணமாக தொடர்ந்து படிப்படியாக தங்கம் விலை குறைந்து வந்தது நகை பிரியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
எனினும், கடந்த 2 நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வந்தது. இருப்பினும் இன்று விலை குறைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,120க்கும் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,20,960க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று ( மார்ச் 12) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 150 குறைந்து ஒரு கிராம் ரூ.14,970க்கும் சவரனுக்கு ரூ.1200 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால், 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.190 குறைந்து ஒரு கிராம் ரூ.12,700க்கும், சவரனுக்கு ரூ.1,520 குறைந்து ஒரு சவரன் ரூ.1,01,600க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.290க்கும், ஒரு கிலோ ரூ.2,90,000க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

