வீரத்துறவி’ இராமகோபாலன் பிறந்தநாளை முன்னிட்டு, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தமிழ்நாட்டில் மதமாற்றங்களுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி அதில் வெற்றி பெற்று, இந்து மதத்தின் காவலராக திகழ்ந்த கவிஞர், பாடகர், எழுத்தாளர், சொற்பொழிவாளர், பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர் என பன்முகம் கொண்ட, இந்து முன்னணி நிறுவனர் வீரத்துறவி அமரர் திரு. ராமகோபாலன் ஜி அவர்களின் பிறந்தநாள் இன்று! பல ஆண்டுகள் ஓடாமல் இருந்த திருவாரூர் தேரை ஓடவைத்த பெருமைக்குரியவர்.
தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு கொலைமுயற்சிகளை வெற்றிகரமாக முறியடித்தவர். பெண்களே சக்தியின் வடிவம் எனக் கருதியதுடன், திருவிளக்கு பூஜையின் வழியாக ஹிந்து பெண்களை ஒருங்கிணைத்தவர். இன்றைய தினத்தில், வீரத்துறவி அமரர் ராமகோபாலன் ஜி அவர்களின் புகழைப் போற்றி வணங்குவோம்! என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

