மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் சீரிய தலைமையிலான ஆட்சியில், 2015 ஜனவரி 9ம் தேதிக்கு முன் ஆவணங்களின்றி இந்தியாவுக்கு அகதிகளாய்ப் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு தண்டனை விதிகளை விலக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
இந்த மனிதாபிமானமான முடிவினை எடுத்திருக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கும் மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது இலங்கைத் தமிழர்கள் நலனின் மீது நமது பாரதப் பிரதமர் கொண்டுள்ள ஆழ்ந்த அக்கறையையும் பரிவையும் வெளிப்படுத்துகிறது. அவர்களின் வாழ்வை உயர்த்த நமது மத்திய அரசு பெரும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகள் எதிர்நோக்கும் பல நீண்டகாலச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆரம்பமாக இந்த முடிவு அமைந்துள்ளது.

