குடியரசு துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரு.C.P.ராதாகிருஷ்ணனை பாஜக மாநில தலைவர் திரு.நயினார் நாகேந்திரன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
15வது குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்று இன்று பதவியேற்க இருக்கும் அண்ணன் திரு.C.P.ராதாகிருஷ்ணன் அவர்களை நமது தேசத்தின் தலைநகர் டெல்லியில் சந்தித்து எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்.
மேலும் தமிழர் ஒருவர் தேசத்தின் உயரிய பதவியை அலங்கரிக்க இருப்பது குறித்த எனது மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டேன்.

