இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர், ‘ஏவுகணை நாயகர்’ என்கிற பெருமை பெற்ற திரு. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் இன்று!
அறிவியல், கல்வி, தேச முன்னேற்றம், எதிர்காலக் கனவு போன்ற பல துறைகளில் பள்ளி மாணவர்களிடையே பேசியும் எழுதியும், அவர்களிடம் சிந்தனையை விதைத்த மாபெரும் கனவு நாயகன் திரு. அப்துல் கலாம் அவர்கள்!
எப்போதும் மாணவர்களையும் இளைஞர்களையும் நம்பிக்கையுடன் முன்னேற்றத்தின் பாதையில் வழிநடத்தி, அவர்களிடம் கனவுகளை விதைத்து வந்தவர் திரு. அப்துல் கலாம் அவர்கள்!
இன்றைய தினத்தில், திரு. அப்துல் கலாம் அவர்கள் கனவு கண்ட ‘வல்லரசு இந்தியா’ உருவாக நாம் ஒவ்வொருவரும் உறுதி ஏற்போம்!
தந்து எக்ஸ் பக்கத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

