Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, May 1
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 20262 Mins Read41 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

​சாத்​தான்​குளம் தந்​தை, மகன் கொலை வழக்​கில் குற்​ற​வாளி​கள் 9 பேருக்​கும் நேற்று தண்​டனை விவரம் அறி​விப்​ப​தாக மதுரை நீதி​மன்​றம் தெரி​வித்​திருந்த நிலை​யில், ஏப்.2-ம் தேதிக்கு தள்​ளி​வைத்து உத்​தர​விட்​டுள்​ளது.

தூத்​துக்​குடி மாவட்​டம், சாத்​தான் ​குளத்​தைச் சேர்ந்​த ஜெய​ராஜ் மற்​றும் அவரது மகன் பென்​னிக்ஸ் ஆகியோர் சாத்​தான்​குளத்​தில் செல்​போன் கடை நடத்தி வந்​தனர். கரோனா ஊரடங்​கின்​போது குறித்த நேரத்​தைத் தாண்டி கடையை திறந்து வைத்​திருந்​த​தாகக் கூறி, இவர்​கள் இரு​வரை​யும் கடந்த 2020 ஜூன் 19-ம் தேதி இரவு சாத்​தான்​குளம் போலீ​ஸார், காவல் நிலை​யம் அழைத்​துச் சென்று கடுமை​யாகத் தாக்​கினர்.

இதில் ஜூன் 22-ம் தேதி பென்​னிக்​ஸும், 23-ம் தேதி ஜெய​ராஜும் உயி​ரிழந்​தனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசா​ரித்த நிலை​யில், உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தர​வின்​படி, சிபிஐ விசா​ரணைக்கு மாற்​றப்​பட்​டது. இதை கொலை வழக்​காக சிபிஐ பதிவு செய்​து, காவல் ஆய்​வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்​வாளர்​கள் பால​கிருஷ்ணன், ரகு கணேஷ், சிறப்புசார்பு ஆய்​வாளர் பால்​துரை, தலை​மைக் காவலர் முரு​கன், காவலர்கள் சாமதுரை, முத்​து​ராஜா, செல்​லத்​துரை, தாமஸ் பிரான்​சிஸ், வெயிலுமுத்து ஆகிய 10 பேர் கைது செய்​யப்​பட்​டு, மதுரை மத்திய சிறையில் அடைக்​கப்​பட்​டனர். இதில் பால்துரை சிறையில் உடல்​நலக் குறை​வால் உயிரிழந்​தார்.

இதையும் படிக்க :  வட தமிழகத்தில் 3 நாட்கள் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்

இந்த வழக்கு விசா​ரணை கடந்த 5 ஆண்​டு​களாக மதுரை நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வந்​தது. மொத்தம் 100-க்​கும் மேற்​பட்ட சாட்​சிகளிடம் விசாரணை நடத்​தப்​பட்டது. இதைத் தொடர்ந்​து, கடந்த 23-ம் தேதி நீதிபதி முத்​துக்​குமரன் தீர்ப்பளித்தார். ‘‘தந்தை, மகன் இருவரையும் கம்பு, கம்பி போன்ற ஆயுதங்களால் போலீஸார் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மரணத்தை விளைவிக்கும் காயங்கள் உருவாகும் வகையில் இருவரும் தாக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது உடலில் இருந்த காயங்கள் இயற்கைக்கு மாறாக, மரணத்தை விளைவிக்கும் அளவுக்கு இருந்துள்ளன. இதுபோன்ற கொடூர தாக்குதல்கள் ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்ததாக கேள்விப்பட்டுள்ளோம். அதுபோல போலீஸார் தாக்கியுள்ளனர். இருவரையும் இரவு 8 மணி முதல் அதிகாலை 3 மணி வரை போலீஸார் தாக்கியுள்ளனர். தவிர, இருவர் மீதும் போலீஸார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்காக போலி ஆவணங்களை உருவாக்கியுள்ளனர்.

போலீ​ஸார் தாக்கிய​தால்தான் தந்​தை, மகன் இரு​வரும் உயி​ரிழந்தனர் என்ற முடிவுக்கு நீதி​மன்​றம் வரு​கிறது. சாட்​சி​யங்களின் அடிப்படை​யில் 9 பேர் மீதான கொலைக் குற்​றச்​சாட்டு சந்​தேகத்​துக்கு இடமின்றி நிரூபிக்​கப்​பட்​டுள்​ளது. எனவே, இந்த வழக்​கில் ஸ்ரீதர் உள்​ளிட்ட 9 பேரும் குற்​றவாளி​கள் என முடிவு செய்​யப்​படு​கிறது. இவர்​களுக்​கான தண்​டனை விவரம் மார்ச் 30-ம் தேதி (நேற்று) அறிவிக்​கப்​படும்’’ என தெரி​வித்​தார்.

இதையும் படிக்க :  பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: தருமபுரியில் சவுமியா அன்புமணி; பெரம்பூரில் திலகபாமா போட்டி

இதையடுத்து, குற்​ற​வாளி​கள் 9 பேருக்​கும், மதுரை அரசு மருத்​து​வமனை​யில் உடல், மனநல பரிசோதனை நடத்​தப்​பட்​டு, அதற்​கான அறிக்​கையை மருத்​து​வர்​கள் நீதி​மன்​றத்​தில் நேற்று தாக்​கல் செய்​தனர். இதைத் தொடர்ந்​து, குற்​ற​வாளி​கள் 9 பேரும் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்​டனர். உயிரிழந்த ஜெய​ராஜ், பென்னிக்ஸ் குடும்​பத்​தினரும் வந்​திருந்​தனர்.

நீதிபதி முத்​துக்​குமரன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்​தது. அப்​போது தண்​டனை விவரம் தொடர்​பாக மத்​திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்​கல் செய்​யாத​தால், ஏப்​.2-ம் தேதி தண்​டனை விவரம் அறிவிக்​கப்​படும் என நீதிபதி உத்​தர​விட்டு விசா​ரணையை தள்ளிவைத்​தார். இதற்கிடையே, குற்​ற​வாளி​கள் 9 பேருக்​கும் உச்​சபட்ச தண்​டனை வழங்க வேண்​டும் என, உயி​ரிழந்த ஜெய​ராஜ் குடும்​பத்​தினர் வலி​யுறுத்​தி​யிருந்​தது குறிப்​பிடத்​தக்​கது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமேற்கு ஆசிய போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு
Next Article மே.வங்கத்தில் பாஜக வேட்பாளராக வீட்டு வேலை செய்யும் பெண் 2-வது முறையாக போட்டி

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,004 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,004 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.