Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»சட்டப்பேரவை தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் – விசிக உயர்நிலை கூட்டத்தில் தீர்மானம்

சட்டப்பேரவை தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் – விசிக உயர்நிலை கூட்டத்தில் தீர்மானம்

March 24, 20262 Mins Read14 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

சட்டப்பேரவைத் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைக் கேட்டுப் பெறவேண்டுமென்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (வி.சி.க) உயர்நிலை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல், ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் நியமனம் குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தி.மு.க – வி.சி.க இடையே தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்துவரும் நிலையில், சென்னை கோயம்பேடு தனியார் விடுதியில் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் அக்கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைப்பெற்றது.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கிற விசிகவின் வலிமைக்கேற்ப எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ‘இரட்டை இலக்கத்தில்’ தொகுதிகளைக் கேட்டுப் பெற வேண்டும். 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாநிலங்களவைக்கான தேர்தலில் விசிகவுக்கு ஒரு இடத்தைக் கேட்டுப் பெற வேண்டும்.

இதையும் படிக்க :  திருச்சி முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற இடத்திற்கு ஒரு கி.மீ. அருகே காவலர் குடியிருப்பில் கொலை சம்பவம்

வருவாய் மாவட்ட எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு, கட்சியின் கட்டமைப்பை உருவாக்குவது வழக்கமான நடைமுறையாகும். ஆனால், வி.சி.க அதனின்று மாறுபட்டு 234 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் ‘தொகுதி மாவட்டங்களாக’ அறிவித்துள்ளது. இது அரசியலரங்கில் முதல் முறையாக வி.சி.க முன்னெடுத்துள்ள அரிய முயற்சியாகும். இதன்மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்கக்கூடிய ஆற்றல் வாய்ந்த கட்சியாகவும் வி.சி.க வலுப்பெற்றுள்ளது.

அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்திவரும் அநீதியானப் போரை இந்த உயர்நிலைக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. சர்வதேச சட்டங்களுக்கு மாறாக குழந்தைகள் படிக்கும் பள்ளியின்மீது குண்டுவீசி சுமார் 168 குழந்தைகளை அமெரிக்கா படுகொலை செய்துள்ளது. இது போர்க்குற்றமாகும். எனவே, சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் அமெரிக்க அதிபரைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்.

ஈரான் மீது நடந்துவரும் போரின் காரணமாக, உலகம் முழுவதும் எண்ணெய், எரிவாயு உள்ளிட்டவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்து, மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. எனவே, இந்தப் போரை நிறுத்துவதற்கு ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்தியா முழுமூச்சாகப் பாடுபட வேண்டும்.

இதையும் படிக்க :  பண பலத்தை பயன்படுத்தும் அரசியல்வாதிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தேர்தல் ஆணையம் திட்டம்

சிறு வணிகர்கள் தமது அன்றாடக் கொள்முதலுக்காக எடுத்துச்செல்லும் சிறு சிறு தொகைகளைக்கூட தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்வது அவர்களது வாழ்வாதாரத்தையே சிதைப்பதாக உள்ளது. பிற மாநிலங்களில் இந்த அளவுக்கு நெருக்கடி இல்லை. எனவே மக்களின் இயல்பு வாழ்க்கை தடைபடாமல் இருக்க உரிய அறிவுறுத்தலை மாநிலத் தேர்தல் அதிகாரி (CEO) வழங்க வேண்டும்.

இந்நிலையில், தி.மு.க உடனான கூட்டணி பங்கீட்டின் முடிவில் வி.சி.க-வுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பது தெரியவரும். முன்னதாக, தொகுதிகள் சற்று குறைந்தாலும், தி.மு.க-வுடன் இணைந்து ‘இந்த தேர்தலில் பயணிப்போம்’ என வி.சி.க உறுதியாக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருந்தார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவல்துறையினர் 9 பேரும் குற்றவாளிகள்: மதுரை நீதிமன்றம் தீர்ப்பு
Next Article திருத்தணியில் இருந்து தேர்தல் பரப்புரையைத் தொடங்கிய நாம் தமிழர் சீமான்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.