நடுத்தர வர்க்க மக்களின் சேமிப்பாக இருந்த தங்கம், தற்போது நினைக்கக் கூட முடியாத அளவுக்கு விலை அதிகரித்து வருகிறது.
இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக தங்கம் விலை அதிரடியாக சரிந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு மேல் தங்கம் விலை குறைந்து வருவதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நேற்று முன் தினம், 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.330 குறைந்து ஒரு கிராம் ரூ.13,620க்கும் சவரனுக்கு ரூ.2,640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,08,960க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.670 குறைந்து ஒரு கிராம் ரூ.12,950க்கும் சவரனுக்கு ரூ.5,360 குறைந்து ஒரு சவரன் ரூ.1,03,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.235க்கும், கிலோவுக்கு ரூ.15,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,35,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போன்றே வெள்ளி விலையும் சரிந்து வருவது, நகை பிரியர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி விலை மேலும் குறையும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

