ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 480 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,17,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை நேற்று (மார்ச் 16) கிராமுக்கு ரூ. 50 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,710க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 60 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,650க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ. 400 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,17,680க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ. 480 குறைந்து சவரன் ரூ. 1,17,200க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை நேற்று கிராமுக்கு ரூ. 4 குறைந்து ரூ. 276க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 4 உயர்ந்து ரூ. 280க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி நேற்று ஒரு கிலோ ரூ. 2,76,00க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 4,000 அதிகரித்து ஒரு கிலோ ரூ. 2,80,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

