Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, April 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஆன்மீகம்»சந்திர கிரகணத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் நடை அடைப்பு: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

சந்திர கிரகணத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் நடை அடைப்பு: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

March 3, 20262 Mins Read10 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நடை அடைக்கபட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

வானில் சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது பூமியின் நிழல் நிலவின் மீது விழுகிறது. இதுவே சந்திர கிரகணம் ஆகும். இந்த ஆண்டுக்கான முதல் முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது. நிலா சிவப்பு நிறத்தில் ஒளிர்வதுடன் நீல விளிம்புடன் காட்சியளிக்கும். முழு கிரகணத்தின் போது சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தை கடந்து வளைந்து செல்கிறது. இதனால் நீல ஒளி சிதறுகிறது, சிவப்பு ஒளி மட்டும் நிலவை அடைகிறது; இதனால் நிலவு அடர் ஆரஞ்சு நிறத்தில் தோன்றும்; இது பிளட் மூன் எனப்படுகிறது. இன்று நீல விளிம்புடன் சிவப்பு நிலவை பார்க்கலாம், சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம், தெளிவாக காண தொலை நோக்குகளை பயன்படுத்தலாம். டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இறுதி பகுதி மட்டுமே தெரியும்.

இதையும் படிக்க :  ஜோதிட நாள்காட்டி 13.03.2026 | மாசி 29

பகுதி நேர கிரகணம் மாலை 3:20 மணிக்கு, முழு சந்திர கிரகணம் இந்திய நேரப்படி இன்று மாலை 4:45 மணிக்கு தொடங்குகிறது. முழு நிலவாக மாலை 5:10-க்கு காட்சி அளிக்கும். இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் சூரியன் மறைவிற்குப் பிறகு நிலவு உதிக்கும் என்பதால் கிரகணத்தின் கடைசி சில நிமிடங்களை மட்டுமே பார்க்க முடியும். டெல்லியில் நிலவு மாலை 6:22 மணிக்கு உதிக்கும், மும்பையில் நிலவு மாலை 6:40 மணிக்கு உதிக்கும், மாலை 6:47 மணிக்கு கிரகணம் நிறைவடைகிறது.

எனவே டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் இருப்பவர்கள் 7 முதல் 25 நிமிடங்கள் வரை மட்டுமே இந்த சிவப்பு நிற நிலவே ரசிக்க முடியும். குறிப்பாக சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு கிழக்கு அடிவானத்தை சுற்றி ரத்த நிலவின் சிறந்த காட்சிகளை காண முடியும். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் தொலைநோக்கி மூலம் பொதுமக்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் ! கட்சிப் பெயரை அறிவித்தார் சசிகலா!

இந்நிலையில், தஞ்சாவூரில் உலகப் பிரசித்தி பெற்ற பெரிய கோயிலில் காலை பூஜைகள் நிறைவடைந்த உடன் இன்று காலை 9 மணிக்கு நடை சாத்தப்பட்டது. பக்தர்கள் கோயிலில் இருந்து வெளியேறினர். கிரகணம் முடிந்து பரிகார பூஜைகள் செய்த பின்னர் இரவு 7.30 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். இதனால் வெளியூர்களில் இருந்து வந்த சுற்றுலாப் பணிகள் பெரிய கோயிலை பார்க்க முடியாமலும், சுவாமியை தரிசனம் செய்ய முடியாமலும் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்றனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஅடிப்படை வசதி செய்து தராததால் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பேனர்
Next Article தீக்குச்சி குடோனில் தீ விபத்து: உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வு

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.