நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11,385-க்கும், ஒரு சவரன் ரூ.91,080-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.40ம், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,425-க்கும், ஒருசவரன் ரூ.91,400-க்கும் விற்பனை ஆனது.
நேற்றும் தங்கம் புதிய உச்சத்தை தொட்டு இருந்தது. தங்கம் விலை இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.165 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,260-க்கும், ஒரு சவரன் ரூ.1,320 குறைந்து, ஒரு சவரன் ரூ.90,080-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை வெள்ளி விலையும் நேற்று கிராமுக்கு ரூ.7-ம், கிலோவுக்கு ரூ.7,000-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.177-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 77 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று வெள்ளி விலை மேலும் அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3,000-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.180-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் விலையை போல வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியிருக்கிறது.

