ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக தனது ராணுவப் பணியைத் துறந்து, சமூகப் போராட்டத்தில் ஈடுபட்டு தன் வாழ்க்கையையே தியாகம் செய்த தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்தநாள் இன்று!
மரத்தடிகளிலும், தோப்புகளிலும், வயல்வெளிகளிலும் மக்களைச் சந்தித்து, தீண்டாமை கொடுமைக்கு எதிராக இவர் மேற்கொண்ட பயணங்கள், பல கிராம மக்களின் அடிமைத்தனத்தின் விலங்குகளைத் தகர்த்தெறிந்தது.
‘ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குழந்தைகளே, பள்ளிகளை நோக்கிப் புறப்படுங்கள்!’ என தென் மாவட்டங்களில் இவர் செய்த பிரச்சாரம், பல குடும்பங்களின் இருண்ட இல்லங்களில் கல்வி விளக்கை பிரகாசிக்கச் செய்தது.
இன்றைய தினத்தில் தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் புகழைப் போற்றி வணங்குவோம்!
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

