மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்களுடனான முக்கிய ஆலோசனை கூட்டம் இன்று சென்னை கமலாலயத்தில்
எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு மாநிலம் முழுவதுமான எனது சுற்றுப்பயணத்தை தீவிரப்படுத்துவது குறித்த முக்கிய ஆலோசனைக்கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. அமைப்பு பொது செயலாளர் திரு. கேசவ விநாயகம், மாநில துணைத் தலைவர்கள் திரு.சக்கரவர்த்தி, திரு.ஏ.ஜி.சம்பத், திரு.வி.பி.துரைசாமி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் திரு.H. ராஜா, தெலுங்கானா முன்னாள் மேதகு ஆளுநர் திருமதி. தமிழிசை செளந்திரராஜன், மாண்புமிகு கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மற்றும் தேசிய மகளிர் அணி தலைவர் திருமதி. வானதி சீனிவாசன், மாநில பொதுச்செயலாளர் திரு. கருப்பு முருகானந்தம் ஆகியோருடன் இணைந்து மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்களை சந்தித்தேன்
2026ல் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியை மலர வைக்க, மக்கள் சந்திப்பு, சுற்றுப்பயணங்களுக்கான திட்டமிடல் குறித்து கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.
இவ்வாறு தனது எக்ஸ் பக்கத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

