பெரும் பாரம்பரியத்திற்கு சொந்தமான, இராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளையமன்னர், திரு.ஆதித்ய சேதுபதி அவர்கள் தமிழக பாரதிய ஜனதா இளைஞரணியின் மாநில பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
வீரத் துறவி விவேகானந்தர் அவர்கள், அமெரிக்காவின் சிகாகோ மாநகரில், நடைபெற்ற உலக சமய மாநாட்டில் கலந்துகொண்டு, நம் ஹிந்து மதத்தின் பெருமையை உலகறியச் செய்ய காரணமாக அமைந்தவர் அப்போதைய ராமநாதபுர சமஸ்தானத்தின் மன்னர் திரு.பாஸ்கர சேதுபதி அவர்கள்.
அவரது வழித் தோன்றலான தற்போதைய மன்னர் திரு. ஆதித்ய சேதுபதி அவர்கள், பாஜக மாநில இளைஞரணி செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
தனது கல்லூரி காலத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின், மாணவர் பிரிவான ABVP-யின் அமைப்பில் இணைந்து மாநில இணை செயலாளராகவும் தீவிரமாக செயல்பட்டு வந்த இவர், இந்தியாவின் பல மாநிலங்களில் பிரச்சாரகராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தமிழ்நாட்டில் தொடங்கிய இவரது பயணம், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள், மற்றும் நம் பாரத தலைநகரான டெல்லி, இந்தியாவின் பிற மாநிலங்கள் என, மிக நீண்ட அனுபவத்தை கொண்டது.
டெல்லி JNU மாவட்ட அமைப்பு செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.
திரு. ஆதித்ய சேதுபதி அவர்கள் ஆயிரக்கணக்கான இளைஞர்களுடன், நமது பாஜகவில் இணைந்து, நம் தமிழக இளைஞர்கள் மத்தியில் புதிய ஊக்கத்தையும் நம்பிக்கையும் விதைத்தவர்.
தலைமை, தனக்கு கொடுத்த பொறுப்பை எவ்வளவு இடர்பாடுகள் நேரிட்டாலும் மிக நேர்த்தியாக செய்து முடிக்கும் ஆற்றலும், திறமையும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட திரு. ஆதித்ய சேதுபதி அவர்கள், தனக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த, புதிய பொறப்பை ஏற்று, மிகச் சிறப்பாக செயல்படுவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

