இந்தியாவின் அடுத்த குடியரசுத் துணை தலைவர் தேர்தலுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
குடியரசுத் துணை தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் C.P.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். 767 வாக்குகள் பதிவான நிலையில் C.P.ராதாகிருஷ்ணன் 453 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார். 15 ஓட்டுகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது.

