நாட்டின் 17-வது துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் இன்று செப்டம்பர் 9-ந் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார்.
இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் இன்று மாலை 5 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் திடீரென தமது பதவியை ராஜினாமா செய்ததில் பெரும் சர்ச்சை வெடித்தது.
இதனையடுத்து துணை ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அறிவிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
இத்தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி வேட்பாளராக உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி ஆகியோர் களம் காண்கின்றனர்.

