Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

பாகிஸ்தானில் உள்ள ஆப்கன் நாட்டினர் உடனடியாக வெளியேற வேண்டும் – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

October 18, 2025

ஒரு கிலோ இனிப்பு ரூ.1,11,000 விலையில் விற்பனை

October 18, 2025

உயர்ந்துகொண்டே செல்லும் தங்கம் விலை குறையுமா?

October 18, 2025
Facebook X (Twitter) Instagram
Sunday, October 19
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»திமுக அரசுக்கு அழிவு நெருங்கி விட்டது… நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திமுக அரசுக்கு அழிவு நெருங்கி விட்டது… நயினார் நாகேந்திரன் ஆவேசம்

August 14, 20252 Mins Read30 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

சென்னை: தூய்மைப் பணியாளர்கள் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக அரசுக்கு அழிவு நெருங்கி விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தூய்மைப் பணியாளர்களைத் துன்புறுத்தும் திமுக அரசுக்கு அழிவு நெருங்கிவிட்டது! திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சென்னையில் கடந்த 13 நாட்களாகப் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை நேற்று இரவோடு இரவாக வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியுள்ள அறிவாலயம் அரசின் அடக்குமுறை துளியும் மனிதாபிமானமற்றச் செயல்.

தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய ஒடுக்கப்பட்ட மக்களை, ஏதோ கொலைக் குற்றவாளிகள் போல அடித்துத் துன்புறுத்தி வெளியேற்றியுள்ள அறிவாலயம் அரசையும் அதன் ஏவல்துறையையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். உயர்நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்த சில நிமிடங்களிலேயே நூற்றுக்கணக்கான காவல்துறையினரைப் போராட்டக் களத்தில் குவித்த திமுக அரசு, போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் மீது இத்தனை நாள் அடக்கி வைத்திருந்த கோபத்தையும் வன்மத்தையும் ஒருசேர கட்டவிழ்த்து விட்டுள்ளது.

இதையும் படிக்க :  திமுக கவுன்சிலரின் ரவுடித்தனத்திற்கு அண்ணாமலை கண்டனம்

வெறும் வீடியோ ஷூட்டுக்காக தூய்மைப் பணியாளர்களுடன் முதல்வர் தேநீர் அருந்தியதையும், உணவு உட்கொண்டதையும் ஏதோ இமாலய சாதனை போல பெருமை கொள்ளும் திமுகவினருக்கு அம்மக்கள் மீது மதிப்போ மரியாதையோ கொஞ்சம் கூட இல்லை என்பதைத் தான் இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

இரவு, பகல் பாராது போராடிய மக்களைச் சென்று சந்திக்க மனமில்லாத முதல்வர் ஸ்டாலினுக்கு திரைப்படக் குழுவினரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறுவதற்கு மட்டும் நேரமிருக்கிறது என்பது வெட்கக்கேடு. ஒருவேளை மனசாட்சியின் அடிப்படையில் முதல்வர் அம்மக்களை நேரில் சந்தித்துப் பேசியிருந்தால் இந்தப் பிரச்சினை எப்போதோ முடிவுக்கு வந்திருக்கும்.

இதையும் படிக்க :  பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் - பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

தூய்மைப் பணியாளர்களும் இந்தளவிற்குத் துன்பப்பட்டிருக்க மாட்டார்கள். அதை விட்டுவிட்டு தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடும் ஏழை எளிய மக்களை ஒடுக்கி அவர்களின் ஜனநாயக உரிமையைப் பறிப்பது தான் திமுகவின் சமூக நீதியா? ஆளும் அரசு எந்த மக்களைக் காயப்படுத்துகிறதோ, அதே மக்களின் கரங்களால் இந்த அராஜக ஆட்சிக்கு முடிவுரை எழுதப்படும்!

இவ்வாறு அந்தப் பதிவில் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

bjp nainar protest
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleதமிழகத்தில் 7 நாள்கள் மழை நீடிக்கும்… சென்னை வானிலை மையம் அறிவிப்பு
Next Article ஜம்மு காஷ்மீரில் திடீர் மேகவெடிப்பு….. 32 பேர் உயிரிழப்பு

Related Posts

Editor's Picks

அஇஅதிமுக 54-ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் திருக்கழுக்குன்றம் மரகதம் குமரவேல் MLA கலந்துகொண்டார்

October 18, 2025
Editor's Picks

மதுரை மேயர் இந்திராணி பொன் வசந்த் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது

October 17, 2025
Editor's Picks

கண்துடைப்புக்காக, ஆணையம், குழு என அமைத்து மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கிறார் முதல்வர் – அண்ணாமலை

October 17, 2025
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20221,914 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,848 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,742 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20221,914 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,848 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,742 Views
Our Picks

பாகிஸ்தானில் உள்ள ஆப்கன் நாட்டினர் உடனடியாக வெளியேற வேண்டும் – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

October 18, 2025

ஒரு கிலோ இனிப்பு ரூ.1,11,000 விலையில் விற்பனை

October 18, 2025

உயர்ந்துகொண்டே செல்லும் தங்கம் விலை குறையுமா?

October 18, 2025

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2025 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.