நேபாளத்தில், சில தினங்களுக்கு முன்பு பேஸ்புக், இன்ஸ்டா, யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டன. இதையடுத்து, பலர் தலைநகர் காத்மாண்டுவில் போராட்டத்தை தொடங்கினர்.
அப்படியே நாட்டின் பிற இடங்களிலும் போராட்டம் வலுத்தது. இந்த போராட்டம் ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறியது.
2வது நாளாக தொடர்ந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது ரப்பர் குண்டுகள் சுடப்பட்டு, கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. இந்த போராட்டத்தை GenZ தலைமுறையினர் முன்நின்று நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பிரதமர் சர்மா ஒலி உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் இல்லங்களுக்கு தீ வைக்கப்பட்டன. அது மட்டுமன்றி இப்போராட்டத்தில் 19க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து அவசர ஆலோசனை நடத்தப்பட்டதில், நேபாளத்தின் இராணுவ தலைவர் பிரதமர் சர்மா ஒலியை பதவியை ராஜினாமா செய்யுமாறு கூறியதாக தகவல் வெளியானது. தற்போது அதன்படியே, சர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இவர், துபாய்க்கு தப்பிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சமூக வலைதளங்களில், அவதூறான கருத்துகள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையில், நேபாள அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது. இதையடுத்து அந்நாட்டின் தகவல் தொழில்நுட்ப துறை மற்றும் தொலைத்தொடர்பு துறைகளின் விதிமுறைக்கு கீழ் பதிவு செய்யாத 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
நேபாள அரசுக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், நாடாளுமன்றம், பிரதமர் மற்றும் அமைச்சர்களின் இல்லங்களுக்கு தீ வைத்தனர். இதையடுத்து, நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
மேலும், இந்நாட்டின் சட்ட ஒழுங்கு பிரச்சனைக்கு பின் பொறுப்பேற்று உள்துற்றை அமைச்சராக இருந்த ரமேஷ் லோகாக் ராஜினாமா செய்தார். கூடவே, சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை அதிரடியாக நீக்கப்பட்டது.