Uncategorizedமருத்துவம்

குளிர்காலத்தில் சருமத்தை பராமரிக்கும் முறை

குளிர்காலம் என்றாலே இயற்கையாகவே உடலில் சில மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. குறிப்பாக சருமத்தில் சுருக்கங்கள், விரிசல்கள், இறந்த செல்கள் வெளியேறாமல் இருப்பது, எனப் பலவையான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தச் சூழலில் நாம் சருமத்தை பராமரிக்கும் முறையைப் பற்றி பார்க்கலாம்.

சருமத்தை கண்டறிய வேண்டும்

சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க முதலில், உங்களுடைய சருமம் எந்த வகையான சருமம் என்பதை கண்டறிய வேண்டும். எண்ணெய் பசையுடைய சருமமா, வறண்ட சருமமா, நார்மல் சருமமா என்பதை அறிந்துகொள்ள வேண்டும். பின்பு அதற்கு ஏற்றவாறு சருமப் பராமரிப்பு தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டும். வெளியே செல்லும் போது அதிக அளவில் கிரீஸ் தன்மை இருக்கும் மாய்ஸ்ச்சரைசர்களைத் தவிர்த்து, எப்போதும் ஈரப்பதம் இருப்பது போலான, இயற்கையான லோஷன்களை முகத்திற்கு பயன்படுத்த வேண்டும். அதே போல் காலநிலைக்கு ஏற்ப சருமப் பராமரிப்பில் சில மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். கோடைக்காலத்தில் சருமத்திற்கு பயன்படுத்தும் தயாரிப்புகளைக் குளிர்காலத்திலும் பயன்படுத்தலாமா? அல்லது வேறு தயாரிப்பு பொருள்களைப் பயன்படுத்தலா? என்று சரும நல மருத்துவரிடம் வழிகாட்டல் பெற்ற பின்னர் சருமத்திற்கு உபயோகிக்கலாம். குறிப்பாக , குளிர்காலத்தில் அதிக நேரம் குளிப்பது ,சூடான நீரில் குளிப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது .குளிப்பதற்காக எடுத்துக்கொள்ளும் நேரம் 5 – 10 நிமிடங்கள் வரை மட்டும் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.முகம் கழுவும் போது அதிக கெமிக்கல்ஸ் கொண்ட சோப், ஃபேஸ்வாஷ் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், இது சருமத்தின் இயற்கையான ஈரப் பதத்தை கிடைக்கவிடாமல் செய்கிறது. பகல் நேரங்களில் மேற்கொள்ளும் சரும பராமரிப்புகளை,  இரவு நேரமும் மேற்கொள்ள வேண்டும். நீண்ட நேரத்துக்கு சருமத்தை ஈரப்பதமாக வைத்திருப்பது போன்ற சரும தயாரிப்புகளை இரவு நேரத்தில் பயன்படுத்தலாம். தேவைக்கேற்ப நீர் அதிகம் அருந்தவும். வைட்டமின் ஏ, வைட்டமின் டி, இரும்பு சத்து, ஜிங்க் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் .இத்தகைய நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் குளிர்காலத்தில் சருமத்தைப் பராமரித்து, உடல் நலத்தைப் பேணி காத்துக்கொள்ளலாம். உங்கள் சருமத்தின் ஆரோக்கிய பயணத்தை இன்று இருந்தே தொடருங்கள்.

Related posts