Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

2026 தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் பாஜக தலைமையிலான NDA வெற்றி பெறும் அமித்ஷா

December 8, 2025

திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில் திமுகவினரை திக்குமுக்காட செய்த ராம.ரவிக்குமார் யார்?

December 4, 2025

புதிய தொழிலாளர் சட்டங்கள் ஊழியர்களுக்கு சாதகமான அம்சங்கள்

December 1, 2025
Facebook X (Twitter) Instagram
Friday, December 12
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»என்ன நடக்கிறது வங்கதேசத்தில் – விரிவான அலசல்

என்ன நடக்கிறது வங்கதேசத்தில் – விரிவான அலசல்

August 6, 20243 Mins Read93 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்ததால், பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பி ஓடினார். அதைத் தொடர்ந்து பிரதமர் மாளிகைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பல பொருட்களையும் திருடி சூறையாடினர். அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள சூழலில், ராணுவம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா டெல்லியில் தஞ்சமடைந்துள்ளார்.

இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தின் வலுவான பிரதமராக இருந்தவர் ஷேக் ஹசீனா. இந்தியாவுடன் நீண்டகால நட்பு கொண்டிருந்த இவர், கடந்த 1996ம் ஆண்டிலும் பின்னர் 2009ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 15 ஆண்டுகளும் பிரதமராக நீடிக்கிறார். இவரது அவாமி லீக் கட்சி தொடர்ந்து 3 முறை ஆட்சி அமைத்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் பொதுத்தேர்தலை சந்தித்தது. இந்த முறை, ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிராக மக்களிடையே அதிருப்தி நிலவியது. ஷேக் ஹசீனாவுக்கு சாதகமில்லாத சூழலில், தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். எதிர்க்கட்சியினரை குறிவைத்து அரசியல் கொலைகள் அரங்கேறின. இதன் காரணமாக பிரதான எதிர்க்கட்சிகள் தேர்தலை முற்றிலும் புறக்கணித்தன.

அரசியல் கட்சிகளின் எதிர்ப்பே இல்லாமல் பொதுத்தேர்தலை சந்தித்த ஷேக் ஹசீனா மீண்டும் வெற்றி பெற்று 5வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றார். இந்த சூழலில், வங்கதேச உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு பணிகளில் 30% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கொண்டு வர ஹசீனா தலைமையிலான அரசு முடிவு செய்தது. பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 1971ல் நடந்த போரில் வெற்றி பெற்று வங்கதேசம் என்கிற தனி நாடு உருவானது. இப்போரில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களின் வாரிசுகளுக்கு வங்கதேச அரசு பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்க கடந்த 2018ல் முடிவு செய்யப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டால் அவாமி லீக் கட்சியினரே ஆதாயம் அடைவார்கள் எனக்கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்த இடஒதுக்கீடு முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதையும் படிக்க :  பலுசிஸ்தான் விடுதலை படை பயங்கரவாத அமைப்பு... அமெரிக்கா அறிவிப்பு

இதன்பிறகு உயர் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து மீண்டும் சமீபத்தில் இச்சட்டத்தை ஹசீனா அரசு கொண்டு வருவதாக அறிவித்ததால் கடந்த மாதம் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். தலைநகர் டாக்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது. இத்துடன் ஹசீனா மீதான மக்களின் அதிருப்தியும் இணைந்து போராட்டம் வலுவடைந்தது.தேர்தலுக்கு முன்பாக நடந்த அரசியல் கொலைகள், கைது நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க வேண்டும், ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டுமென போராட்டத்தின் நோக்கம் முழுக்க முழுக்க ஹசீனாவுக்கு எதிராக மாறியது. பல இடங்களில் மாணவர்களும், ஆளும் கட்சியினரும் மோதிக் கொண்டனர். இதனால் வன்முறை வெடித்ததில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இதற்கிடையே, இடஒதுக்கீட்டை 30 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.ஆனாலும், தியாகிகளின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மாணவர் அமைப்பினரை பேச்சுவார்த்தைக்கு வருமாறு பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்திருந்தார். இதனால் அதிருப்தி அடைந்த மாணவர்கள், பேச்சுவார்த்தை நடத்த மறுப்பு தெரிவித்து கடந்த 3ம் தேதி மீண்டும் போராட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த 2 நாட்களாக நடந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நாடு முழுவதும் போராட்டம் தீயாக பரவியது. ஹசீனா பதவி விலக வேண்டுமென கோரிக்கை வலுத்தது. தலைநகர் டாக்கா நோக்கி நீண்ட பேரணி நேற்று நடத்தப்படும் என மாணவர் அமைப்பினர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், தலைநகர் டாக்காவில் நேற்று நடந்த போராட்டத்தில் சுமார் 4 லட்சம் பேர் ஒன்று கூடினர். நிலைமை கைமீறிப் போன நிலையில், பிரதமர் பதவியை ரகசியமாக ராஜினாமா செய்தார் ஷேக் ஹசீனா. அத்துடன் அவர் தனது சகோதரி ஷேக் ரெஹானாவுடன் நாட்டை விட்டு வெளியேறினர். ராணுவ ஹெலிகாப்டரில் பிரதமர் மாளிகையில் இருந்து தப்பிய அவர்கள், திரிபுரா மாநிலம் அகர்தலா வந்தடைந்து அங்கிருந்து லண்டன் செல்ல திட்டமிட்டதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் டெல்லி அருகே ஹிண்டன் விமான தளத்திற்கு ஹசீனா வங்கதேச விமானப்படையின் சி130 சரக்கு விமானத்தில் மாலை 6 மணி அளவில் வந்திறங்கினார். அங்கிருந்து அவர் ரகசியமான இடத்திற்கு பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டார்.

இதையும் படிக்க :  2024லில் பாஜகவை அகற்றுவதே தனது கடைசியின் போராட்டம் - முதலமைச்சர் சூளுரை !

ஹசீனா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பை ராணுவம் ஏற்றுக் கொண்டது. இதுதொடர்பாக தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்றிய ராணுவ தலைவர் வக்கார் உஸ்-ஜமான், ‘‘நாட்டின் அனைத்து பொறுப்புகளையும் ஏற்கிறேன். அனைவரும் தயவுசெய்து ஒத்துழைக்க வேண்டும். வன்முறையை கைவிட வேண்டும். அனைவருக்கும் நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் அவசரநிலை எதுவும் பிரகடனப்படுத்தப்படவில்லை. விரைவில் இடைக்கால அரசு அமைய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

இதைத் தொடர்ந்து, பிரதமர் ஹசீனா நாட்டை விட்டு தப்பிய தகவல் கிடைத்ததும், நாடு முழுவதும் சாலைகளில் திரண்ட மக்கள் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். பலரும் வெடி வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். அதே சமயம், ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பிரதமர் மாளிகையை கைப்பற்றி உள்ளே நுழைந்தனர். பிரதமர் மாளிகையை சூறையாடிய அவர்கள், அங்கிருந்த பொருட்களை தூக்கிச் சென்றனர்.

ரிக்ஷாக்களை எடுத்து வைத்து கையில் கிடைத்த பொருட்களை மக்கள் எடுத்துச் செல்வது போன்ற பல்வேறு வீடியோக்கள் வெளியாகி உள்ளன. பிரதமரின் கார் உள்ளிட்ட வாகனங்களை தீ வைத்து எரித்தனர். அமைச்சர்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. டாக்காவில் உள்ள அவாமி லீக் கட்சியின் தலைமை அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் வங்கதேசத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

Bangladesh Sheikh Hasina
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகருப்பு எள் லட்டு செய்வது எப்படி?
Next Article துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் நாடு திரும்பினார்

Related Posts

2026 தேர்தல்

2026 தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் பாஜக தலைமையிலான NDA வெற்றி பெறும் அமித்ஷா

December 8, 2025
Editor's Picks

திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில் திமுகவினரை திக்குமுக்காட செய்த ராம.ரவிக்குமார் யார்?

December 4, 2025
Editor's Picks

புதிய தொழிலாளர் சட்டங்கள் ஊழியர்களுக்கு சாதகமான அம்சங்கள்

December 1, 2025
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,085 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,874 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,819 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,085 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,874 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,819 Views
Our Picks

2026 தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் பாஜக தலைமையிலான NDA வெற்றி பெறும் அமித்ஷா

December 8, 2025

திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில் திமுகவினரை திக்குமுக்காட செய்த ராம.ரவிக்குமார் யார்?

December 4, 2025

புதிய தொழிலாளர் சட்டங்கள் ஊழியர்களுக்கு சாதகமான அம்சங்கள்

December 1, 2025

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2025 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.