இந்தியாஉலகம்

இத்தாலியில் நடந்த G7 நாடுகளின் உச்சி மாநாடு சொல்லும் செய்தி என்ன ?..

இத்தாலியில் உள்ள அபூலியா நகரில் நடந்து முடிந்த G7 நாடுகளின் உச்சி மாநாட்டில் உலக நாடுகளின் குரு என போற்றப்படும் பாரதத்தின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்டார்.

மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர் மோடி அவர்கள் கலந்து கொள்ளும் முதல் வெளிநாட்டு நிகழ்ச்சி என இந்தியாவில் மட்டுமன்றி உலக நாடுகளிடையையும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

பிரதமர் மோடி அவர்களை சந்தித்து உரையாடுவதில் பங்கேற்ற உலகத்தலைவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் இருந்தனர்.

கூட்டத்தில் பிரதமர் மோடி அவர்கள் பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

உலகத் தலைவர்களுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடியதில், அவைகளுக்கு தீர்வு கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

எதிர்கால சந்ததியினருக்கு நல்லதொரு உலகத்தை உருவாக்கும் மகத்தான பணிகள் பற்றி பேசப்பட்டன.

G20 நாடுகளின் தலைமை பொறுப்பில் இருக்கும் இந்தியாவின் கருத்துக்களுக்கு உயர் மதிப்பளிக்கப்பட்டது.

2047ல் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக உருவெடுக்கும் என கூட்டத்தில் பிரதமர் மோடி அவர்கள் பெருமைப்பட பேசினார்.

பசுமையான சகாப்தம் உருபெற்றிட உறுப்பு நாடுகள் தங்களது பங்களிப்பை அளிப்பது என உறுதி மேற்கொள்ளப்பட்டது.

உலக நாடுகளில் செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிவு பகிர்தல் தொடக்கி வைக்கப்பட்ட ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இன்று வேகமெடுக்கும் இந்த துறை வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு சிறப்பிடத்தை பெருகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சி உருவாக்கத்தை மையமாக கொண்டிருக்க வேண்டுமேயன்றி அழித்தலுக்கு அடிப்படையாக இருக்கக்கூடாது.

உலகம் உயர்வடைய இந்தியா என்ன ஆலோசனைகள் கூறுகிறது.. பிரதமர் மோடி அவர்களின் கருத்து என்ன என்பதை உலக நாடுகளே ஆவலுடன் காத்திருக்கும் போது இங்குள்ள எதிர்க்கட்சிகள் தேர்தல் தோல்வியை வெற்றி விழாவாக கொண்டாடிக் கொண்டு அறிவிலிகளாக இருக்கின்றனரே ?..

கட்டுரை : புட்டி S.ரகோத்தமன்.

Related posts